Post Master Job Salary Per Month in India – Eligibility & Benefits

📮 Post Master வேலைக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியுமா?

PM Kisan ₹2000 Installment: Reasons for Name Removal and Solutions

இது ஒரு முழுநேர வேலையா? பலருக்குத் தெரியாத முக்கியமான தகவல்கள் இதோ!

இந்திய தபால் துறையின் கீழ், நாடு முழுவதிலும் எண்ணற்ற தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கிராமங்களில் உள்ள கிளை தபால் நிலையங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் வரை பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு பதவிதான் கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master – BPM).

“இந்த பணிக்கு சம்பளம் எவ்வளவு?”

“இது முழு நேர அரசுப் பணியாளரா?”

“எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?”

என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கும். அதற்கான முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


📜 இந்திய தபால் துறை – ஒரு சிறிய கண்ணோட்டம்

FASTag Rules Changed in 2026: Apply by Feb 1 or Pay Extra Toll

தகவல் தொடர்பியல் வரலாற்றில், தபால் சேவை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 1700-களிலேயே இந்தியாவில் தபால் அனுப்பும் முறை பயன்பாட்டில் இருந்தது. மன்னராட்சி காலத்தில், செய்திகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல டாக் சேவகர்கள் இருந்தனர். அவர்கள் ஓடியும், குதிரையில் சென்றும் தகவல்களை எடுத்துச் சென்றனர். சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய தபால் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து, கடித சேவை, பார்சல் சேவை, சேமிப்பு திட்டங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள் என பல நவீன சேவைகளை வழங்கி வருகிறது.


🧑‍💼 கிராமின் டாக் சேவகர்கள் (Gramin Dak Sevaks – GDS)

கிராமப்புற தபால் நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் கிராமின் டாக் சேவகர்கள் (Gramin Dak Sevaks – GDS) என்று அழைக்கப்படுகிறார்கள். இவை இந்திய தபால் துறையின் ஆரம்ப நிலை பதவிகள் ஆகும்.

GDS கீழ் உள்ள முக்கிய பதவிகள்:

📌 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)

📌 உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)

📌 டாக் சேவாக் (Dak Sevak)


💰 Post Master சம்பளம் எவ்வளவு இருக்கும்?

இவை ஆரம்ப நிலை பதவிகள் என்பதால், சம்பளம் Time Related Continuity Allowance (TRCA) அடிப்படையில் வழங்கப்படும்.

Income Tax Changes 2026: New Slabs, Deductions and Important Updates

💵 சம்பள விவரங்கள்:

கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)

👉 மாதத்திற்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் / தாக் சேவக்

👉 மாதத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை

✔️ வருடத்திற்கு 3% சம்பள உயர்வு வழங்கப்படும்.

✔️ மத்திய அரசு விதிகளின்படி பணிக்கொடை மற்றும் சேவை நீக்க சலுகைகள் உண்டு.

✔️ வேலை நேரத்திற்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

📌 ஆண்டு வருமானம்:

BPM – சுமார் ரூ.1,44,000

ABPM / Dak Sevak – சுமார் ரூ.1,20,000


⏰ இது ஒரு முழு நேர வேலையா?

❌ கிடையாது.

இந்திய அஞ்சல் துறையின் GDS ஊழியர்கள் மத்திய அரசின் முழு நேர ஊழியர்கள் கிடையாது.

👉 ஒரு நாளைக்கு:

குறைந்தபட்சம் 4 மணி நேரம்

அதிகபட்சமாக 5 மணி நேரம் வரை மட்டுமே வேலை செய்ய வேண்டும்.

✔️ இது தவிர, வேறு வருமானம் ஈட்டவும் அனுமதி உண்டு.

✔️ நியமிக்கப்படவுள்ள தபால் நிலையத்திற்கு அருகிலேயே வசிக்க வேண்டும்.வசிப்பது கட்டாயம்.


🧾 போஸ்ட் மாஸ்டர் பணிகளில் என்னென்ன அடங்கும்?

🔹 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM):

கிளை தபால் நிலையத்தின் அன்றாட நிர்வாகம்

கடிதங்கள், பார்சல்களை ஒழுங்காக அனுப்புதல்

பணப் பரிவர்த்தனை மற்றும் பதிவுகளைப் பராமரித்தல்

அரசு திட்டங்களின் செயல்பாடு

🔹 உதவி BPM / டாக் சேவாக்:

கடிதங்களை வீடு வீடாக விநியோகித்தல்

தபால் தலை, மற்ற தபால் பொருட்களை விற்பனை செய்தல்

தபால் நிலையத்திற்கு உதவிப் பணிகள் செய்தல்


எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

இந்த வேலைகளுக்கு:

❌ நேரடி நேர்காணல் கிடையாது

❌ எழுத்துத் தேர்வு கிடையாது

✅ தகுதி:

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

10-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வைத்து தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு வேலை நியமனம்


2026-ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட விவரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 28,740

தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 2,009

🗓️ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பிப்ரவரி 14
🌐 விண்ணப்ப இணையதளம்:
👉 https://indiapost.gov.in/gdsonlineengagement


✅ முடிவுரை:

ஒரு நாளைக்கு 4-5 மணி நேரம் வேலை,

10-ம் வகுப்புத் தகுதி,

நிலையான அரசு ஊதியம் போன்ற சிறப்பம்சங்கள் இருப்பதால், கிராமிய தபால் ஊழியர் (GDS) / போஸ்ட் மாஸ்டர் பணிகள் பலரையும் கவரும் வேலைவாய்ப்பாக இருக்கின்றன.

அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும், கூடுதல் வருமானம் தேடுபவர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.


❓FAQ – Post Master Job

போஸ்ட் மாஸ்டர் வேலை பத்தி சில கேள்விகள்!

    1. போஸ்ட் மாஸ்டருக்கு சம்பளம் எவ்ளோ கிடைக்கும்?

    கிளை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு மாசம் 12,000 ரூபாயில இருந்து 29,380 ரூபாய் வரைக்கும் சம்பளம் கிடைக்கும்.

    2. இது முழு நேர வேலையா?

    இல்லீங்க. டெய்லி 4 இல்லன்னா 5 மணி நேரம் மட்டும் வேலை செஞ்சா போதும்.

    3. 10வது படிச்சிருந்தா போஸ்ட் மாஸ்டர் ஆகலாமா?

    தாராளமா ஆகலாம். 10வது பாஸ் பண்ணிருந்தாலே போதும்.

    4. GDS வேலைக்கு எப்படி செலக்ட் பண்ணுவாங்க?

    எழுத்துத் தேர்வு, இன்டர்வியூலாம் கிடையாது. 10வது மார்க் வச்சுதான் எடுப்பாங்க.

    5. GDS வேலையில வேற வேலை பார்க்கலாமா?

    தாராளமா! இது பார்ட் டைம் வேலைதான். அதனால வேற வருமானம் பார்க்க உங்களுக்கு ஓகே.

    6. போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு வயசு என்ன இருக்கணும்?

    18 வயசுல இருந்து 40 வயசு வரைக்கும் இருக்கணும். கவர்மெண்ட் ரூல்ஸ் படி கொஞ்சம் ஏஜ் ரிலாக்சேஷன்லாம் இருக்கு.

    7. 2026ல எத்தன வேகன்சி இருக்கு?

    மொத்தம் 28,740 GDS வேகன்சி இருக்குன்னு சொல்லியிருக்காங்க.

    8. எங்க அப்ளை பண்ணனும்?

    India Post-ஓட வெப்சைட் indiapost.gov.inல ஆன்லைன்ல அப்ளை பண்ணனும்.

    9. இந்த வேலை யாருக்கு செட் ஆகும்?

    கவர்மெண்ட் எக்ஸாம்க்கு படிக்குறவங்களுக்கும், கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு வேணும்னு நினைக்கிறவங்களுக்கும் சூப்பரா இருக்கும்.

    Leave a Comment