LPG Cylinder Expiry Code Explained – Safety Awareness

கேஸ் சிலிண்டர் Expiry Date எப்படி பார்க்கலாம்? – LPG Safety Guide

Table of Contents – LPG Cylinder Expiry Code

கேஸ் சிலிண்டர் எப்போ எக்ஸ்பயர் ஆகும்னு எப்படி தெரிஞ்சுக்கிறது? – 2026க்கான முழு கைடு இதோ!

LPG Cylinder Expiry Code – வீட்ல டெய்லி யூஸ் பண்ற LPG கேஸ் சிலிண்டரை பத்திரமா வெச்சுக்கறது ரொம்ப முக்கியம். நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் என்னன்னா, ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்குறதுதான்.

இந்த பதிவுல, கேஸ் சிலிண்டர் எக்ஸ்பைரி டேட்டை எப்படி செக் பண்றது, அதோட முக்கியத்துவம், பாதுகாப்பு டிப்ஸ், அப்புறம் பொதுவா எல்லாரும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பத்தி எல்லாம் டீடைலா பார்க்கலாம்.

Hydrogen Stove in India: Runs on Water, Not LPG – Future of Cooking?

கேஸ் சிலிண்டருக்கு எக்ஸ்பைரி டேட் இருக்கா?

உண்மையாவே கேஸ் சிலிண்டருக்கு எக்ஸ்பைரி டேட் இருக்கான்னு கேட்டா, கண்டிப்பா இருக்கு! LPG சிலிண்டர்ஸ் எப்பவுமே யூஸ் பண்ண முடியாது. ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் அதுக்கப்புறம் அது:

  • பாதுகாப்பா இருக்கான்னு டெஸ்ட் பண்ணனும்.
  • இல்லன்னா அதை யூஸ் பண்றதே நிறுத்தணும்.

இத கன்ஃபார்ம் பண்றதுக்காகத்தான் எக்ஸ்பைரி கோடு கொடுக்குறாங்க.

கேஸ் சிலிண்டர்ல எக்ஸ்பைரி டேட் எங்க பாக்கலாம்னு தெரியுமா?

சிலிண்டர் மேல இருக்குற இரும்பு வளையத்துல ஒரு குறி இருக்கும். அத பாருங்க.

எப்படின்னா,

A-27
B-25
C-30
D-26
இந்த மாதிரி இருக்கும்.

A, B, C, D இதெல்லாம் எதைக் காட்டுது?

இந்த எழுத்துங்க ஒவ்வொரு மாசத்தோட குரூப்ப சொல்றதுக்கு யூஸ் ஆகுது:

A → ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாசம்லாம் இதுல வந்துரும்.
B → ஏப்ரல், மே, ஜூன் உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அதுதான் இது.
C → ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் இந்த மாசங்கள குறிக்கும்.
D → அக்டோபர், நவம்பர், டிசம்பர் இத சொல்லுது.

LPG Subsidy Increased to ₹300 – Who is Eligible & How to Check Status

எண்கள் எதைக் காட்டுது? LPG Cylinder Expiry Code

எண்கள் எதைக் காட்டுதுன்னா, அது எந்த வருஷத்தைக் குறிக்குதுன்னு அர்த்தம்.

உதாரணத்துக்கு, A-27னு இருந்தா, 2027 மார்ச் வரைக்கும் செல்லும். அதே மாதிரி C-25னா, 2025 செப்டம்பர் வரைக்கும் செல்லும்னு அர்த்தம்.

LPG Cylinder Expiry Code

LPG Cylinder Expiry Code – எக்ஸ்பயரி ஆன சிலிண்டரை யூஸ் பண்ணலாமா?

கூடவே கூடாது!

ஏன்னா:

  • காத்து லீக் ஆக நிறைய சான்ஸ் இருக்கு
  • வெடிச்சிரும் பாத்துக்கங்க
  • உசுருக்கே ஆபத்தாயிரும்

இது ரொம்ப முக்கியமான விஷயம் மக்களே.

ஏன் எக்ஸ்பயரி டேட் முக்கியம்னு கேக்குறீங்களா?

கேஸ் சிலிண்டர் எப்பவும் பிரஷர்ல இருக்கும்.

காலப்போக்குல என்ன ஆகும்னா:

  • உள்ள இருக்கற மெட்டல் வீக் ஆயிரும்
  • துரு புடிச்சு போயிரும்
  • லீக்கேஜ் ஆக நிறைய வாய்ப்பிருக்கு
  • அதான் எக்ஸ்பயரி டேட்டை செக் பண்ணனும் சொல்றது.

சிலிண்டர் பாதுகாப்பு டிப்ஸ் கொஞ்சம் கேளுங்க

யூஸ் பண்ணும் போது இதெல்லாம் கவனியுங்க:

  • எக்ஸ்பயரி டேட் இருக்கான்னு பாருங்க
  • ரெகுலேட்டர் சரியா இருக்கணும்
  • பைப்ல லீக் இருக்கான்னு பாருங்க
  • சிலிண்டரை நேரா நிப்பாட்டுங்க

சந்தேகம் இருந்தா:

  • உடனே கேஸ் ஏஜென்சிக்கு கால் பண்ணுங்க
  • சிலிண்டரை மாத்திக்குங்க

வீட்டுக்கு சில டிப்ஸ்

  • சமையலறையில நல்லா காத்தோட்டமா இருக்கணும்
  • சிலிண்டர் பக்கத்துல தீப்பெட்டியை வைக்காதீங்க
  • சமைச்சு முடிச்சதும் ரெகுலேட்டரை ஆஃப் பண்ணுங்க
  • பொதுவா எல்லாரும் பண்ற தப்பு என்னன்னா
  • எக்ஸ்பயரி டேட்ட பாக்காம யூஸ் பண்ணுவாங்க
  • பழைய சிலிண்டர் யூஸ் பண்ணுவாங்க
  • லீக் இருந்தும் கண்டுக்காம விட்டுருவாங்க

இதெல்லாம் பெரிய விபத்துல கொண்டு போய் விட்டுரும்.

எக்ஸ்பயரி ஆன சிலிண்டர் என்ன பண்ணுவாங்க?

  • அந்த கேஸ் கம்பெனிக்காரங்க மறுபடியும் டெஸ்ட் பண்ணுவாங்க
  • சேஃப்டியா இருந்தா மறுபடியும் யூஸ் பண்ணுவாங்க
  • இல்லன்னா தூக்கி போட்டுருவாங்க

ஞாபகம் வெச்சுக்க வேண்டியது என்னன்னா

ஒவ்வொரு தடவையும் சிலிண்டர் வாங்கும்போது:

  • எக்ஸ்பயரி டேட் இருக்கான்னு செக் பண்ணுங்க
  • சீல் ஒழுங்கா இருக்கான்னு பாருங்க
  • லீக்கேஜ் ஸ்மெல் வருதான்னு பாருங்க.

முடிவுரை

கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் மக்களே. ஏன்னா சின்னதா அசந்தாலும் பெரிய விபத்து வந்துடும். அதனால ஒவ்வொரு முறையும் சிலிண்டர் யூஸ் பண்றதுக்கு முன்னாடி அதோட எக்ஸ்பயரி டேட் இருக்கான்னு கண்டிப்பா செக் பண்ணிருங்க.

சேஃபா இருப்போம், நம்ம குடும்பத்தையும் சேஃபா வெச்சுப்போம்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்– LPG Cylinder Expiry Code

கேஸ் சிலிண்டர் எக்ஸ்பயரி டேட் எங்க இருக்கும்னு தெரியுமா?

அது சிலிண்டர் மேல இருக்கிற மெட்டல் ஸ்ட்ரிப்ல இருக்கும் பாருங்க.

அதுல இருக்கிற A, B, C, Dலாம் என்னது?

அதான் மாசத்த குறிக்குது (Quarter system). அதாவது மூணு மாசத்துக்கு ஒருக்கா பிரிக்கிறது.

எக்ஸ்பயரி ஆன சிலிண்டர் யூஸ் பண்ணலாமா ப்ரோ?

அய்யோ! கூடவே கூடாது. ரொம்ப டேஞ்சர் அது.

எக்ஸ்பயரி டேட் எப்படி கண்டுபிடிக்கிறது?

அதுல இருக்கிற எழுத்தையும், வருஷத்தையும் வெச்சு ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்

சிலிண்டர்ல லீக் ஆனா என்ன பண்ணலாம்?

உடனே ரெகுலேட்டர ஆஃப் பண்ணிட்டு கேஸ் ஏஜென்சிக்கு போன் பண்ணி சொல்லுங்க.

சிலிண்டரை எவ்ளோ நாள் வரைக்கும் யூஸ் பண்ணலாம்?

எக்ஸ்பயரி டேட் வரைக்கும் தாராளமா யூஸ் பண்ணலாம். அதுவரைக்கும் சேஃப்தான்.

புது சிலிண்டர் வாங்கும்போது என்னலாம் செக் பண்ணனும்?

எக்ஸ்பயரி டேட், சீல், அப்புறம் லீக்கேஜ் இருக்கான்னு பாருங்க.

Leave a Comment