
ITI முடித்தவர்களுக்கு அருமையான வேலை வாய்ப்பு!கப்பல் கட்டும் நிறுவனத்தில் 210 காலிப்பணியிடங்கள்
ITI முடித்த நபரா நீங்கள்?
கேரளா, கொச்சியில் இருக்கின்ற கப்பல் கட்டும் கம்பெனியில் பல விதமான பிரிவுகளுக்கு நிரந்தரமான வேலைக்கு ஆட்கள் எடுக்க இருக்கிறார்கள். இதற்காக விண்ணப்பங்கள் இப்பொழுது வாங்கப்பட்டு வருகிறது.

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் ITI படித்தவர்களுக்கான 210 பணியிடங்கள் அறிவிப்பு| Recruitment 2026
மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம் (Cochin Shipyard Limited – CSL), வேலை செய்பவர்கள் (Workmen) அதாவது ஐடிஐ (ITI) பணியாளர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலமாக ஐடிஐ (ITI) பிரிவின் கீழ் மொத்தமாக 210 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையவழி விண்ணப்பங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
நிறுவனமும் பணியாளர் தேர்வு குறித்த தகவல்களும்.
- அமைப்பின் பெயர்: Cochin Shipyard Limited (CSL)
- நிறுவனத்தின் வகை: மத்திய அரசாங்க நிறுவனம்
- துறை: ITI வேலை செய்பவர்கள் (Workmen)
- வேலை செய்யும் இடம்: கொச்சி, கேரளா
- அறிவிப்பின் பெயர்: ITI Workmen Recruitment 2026 🙁 ITI வேலை செய்பவர்கள் ஆட்சேர்ப்பு 2026)
- அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://cochinshipyard.in/
காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் பதவிகளின் விவரங்கள்.
இந்த வேலைக்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கையின் வாயிலாக பின்வரும் தொழில் துறைகளில் வேலைக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்:
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| Welder / Gas & Electric / Sheet Metal Worker / Fitter / Plumber / Mechanic (Motor Vehicle / Diesel) | 152 |
| மெக்கானிக்ஸ்ட் (Machinist) | 6 |
| பிட்டர் (Electrical / Electronics) | 25 |
| கிரேன் ஆப்ரேட்டர் | 7 |
| இன்ஸ்ட்ரூமென்டேஷன் மெக்கானிக் | 7 |
| ஷிப் ரைட் (Wood) | 4 |
| பெயிண்டர் | 9 |
| மொத்தம் | 210 |
சம்பளத் தகவல்- salary
- அடிப்படை சம்பளம்: ரூ.22,500
- சம்பள வரம்பு: ரூ.22,500 – ரூ.73,750
- அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகள் சேர்த்து
👉 மாதம் சுமார் ரூ.41,795 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் – qualification
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்:
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- தேசிய தொழில் சான்றிதழ் (NTC / NAC) அவசியம்
- சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு- age limit
- அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
- கணக்கீடு செய்யப்படும் தேதி: 23.01.2026
- அதாவது, விண்ணப்பதாரர்கள் 24.01.1991க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்
- அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு பொருந்தும்.
தேர்வு செய்யப்படும் விதம்:
இந்த வேலைக்கான ஆள் சேர்ப்பு இரண்டு கட்டங்களாக நடக்கும்:
🔹 முதல் நிலை – கம்ப்யூட்டர் வழி தேர்வு
மொத்த மார்க்: 30
தேர்வு நேரம்: 35 நிமிடம்
கேள்விகள்:
பொது அறிவு – 5
நுண்ணறிவு – 5
வேலை சம்பந்தப்பட்ட கேள்விகள் – 20
🔹 இரண்டாம் நிலை – செயல்முறை தேர்வு
மார்க்குகள்: 70
👉 மொத்தமாக 100 மார்க்குகளை வைத்து தேர்வு நடக்கும்.
தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்ச மார்க்:
OBC – 45%
SC / ST – 40%
விண்ணப்பிக்கும் வழிமுறை – applying method
- விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்கப்படும்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://cochinshipyard.in/
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.750
- SC / ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை
முக்கியமான நாட்கள்- விண்ணப்பிக்க வேண்டிய தேதி
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடக்கம் | 06.01.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 23.01.2026 |
| முதல் கட்டத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
| இரண்டாம் கட்டத் தேர்வு | முதல் கட்ட முடிவுகள் வெளியான பின் |
முக்கியமான குறிப்பு
மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்று ITI முடித்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. பரீட்சைக்கு உண்டான சிலபஸ் மற்றும் மற்ற விவரங்களை அரசாங்க இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👉 தேவையான தகுதி உடைய மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.