PM-Kisan லிஸ்ட்ல உங்க பேரு இல்லையா? 2000 ரூவா மிஸ் பண்ணிடாதீங்க – உடனே இத பண்ணுங்க!
FASTag Rules Changed in 2026: Apply by Feb 1 or Pay Extra Toll
பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்துல 21வது தவணை ரூ.2000 எப்போ வேணா விவசாயிகளோட அக்கவுண்ட்ல வந்து விழலாம்னு சொல்றாங்க. அதுக்காக கோடிக்கணக்கான விவசாயிங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
ஆனா, நிறைய விவசாயிகளோட பேரு லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்களாம்னு கவர்மெண்ட்ல இருந்து தகவல் வந்துருக்கு. அதனால விவசாயிங்க கொஞ்சம் அப்செட்ல இருக்காங்க.
👉 “நம்ம பேரு லிஸ்ட்ல இருக்கா?”
👉 “ரூ.2000 வருமா, வராதா?”
னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்காங்க.
இந்த பதிவுல,
✔️ உங்க பேரு ஏன் லிஸ்ட்ல இல்லாம போலாம்
✔️ அத எப்படி சரி பண்ணலாம்
✔️ PM-KISAN 2000 ரூவா கண்டிப்பா வர வைக்க என்ன பண்ணனும்
னு ஈஸியா பார்க்கலாம் வாங்க.
🌾 பிஎம்-கிசான் சம்மான் நிதி திட்டம்னா என்ன?
Tamil Nadu Dairy Cow Loan Scheme 2026 Offers ₹1.20 Lakh Government Financial Support
2019ல ஆரம்பிச்ச பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம், சின்ன விவசாயிகளுக்கு வருஷத்துக்கு ரூ.6000 ரூவா தர்ற திட்டம்.
👉 இந்த பணம்
ரூ.2000 ன்னு
3 தடவையா
DBT (Direct Benefit Transfer) மூலமா
டைரக்டா அக்கவுண்ட்ல போடுவாங்க.
விதை, உரம், தண்ணி, செடிக்கு மருந்துன்னு விவசாய செலவுக்கு இந்த பணம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இதுவரைக்கும் 9.7 கோடி விவசாயிங்க இதுல பயன் அடைஞ்சிருக்காங்க.
🚨 21வது தவணைக்கு முன்னாடி ஏன் இவ்வளவு செக்கிங்?
Income Tax Changes 2026: New Slabs, Deductions and Important Updates
February 2, 2026 by Praveena
இப்போ கவர்மெண்ட் நிறைய செக் பண்ணிட்டு இருக்காங்க.
ஏன்னா:
பொய் பேருல இருக்கறவங்கள எடுக்கணும்
தகுதி இல்லாதவங்கள கண்டுபிடிக்கணும்
உண்மையான விவசாயிக்கு மட்டும் பணம் போகணும்
👉 அதனால நிறைய பேரு லிஸ்ட்ல இருந்து போயிருக்காங்க. பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
❓ PM-KISAN லிஸ்ட்ல உங்க பேரு இல்லன்னா என்ன காரணம்னு பாப்போமா? இதோ சில சான்ஸ் இருக்கு:
1️⃣ e-KYC முடிக்காம இருந்தா!
PM-KISANல e-KYC முக்கியம் பாஸ். அதனால பெண்டிங்ல இருந்தா பணம் வராது.
2️⃣ ஆதார் கார்ட வங்கியோட லிங்க் பண்ணலனா!
DBT-ல பணம் வரணும்னா, ஆதார் + பேங்க் அக்கவுண்ட் லிங்க் பண்ணிருக்கணும்.
3️⃣ பேரு இல்லாட்டி டீடைல்ஸ்ல மிஸ்டேக் இருந்தா!
ஆதார்ல ஒரு பேரு, பேங்க்ல ஒரு பேரு, நிலத்துல ஒரு பேருன்னு இருந்தா சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்கூட பெரிய பஞ்சாயத்தாகிடும்.
4️⃣ பேங்க் டீடைல்ஸ் தப்பா இருந்தா!
IFSC கோடு தப்பா கொடுத்தாலோ இல்ல அக்கவுண்ட் வேலை செய்யாம இருந்தாலோ பணம் ரிட்டர்ன் ஆக வாய்ப்பிருக்கு.
5️⃣ தகுதி இல்லனா!
நிலம் உங்க பேர்ல இல்லீன்னா, குத்தகைக்கு விவசாயம் பண்ணீனா, டூப்ளிகேட் ரெக்கார்ட்ஸ் இருந்தா உங்கள தூக்கிடுவாங்க!
✅ உங்க பேரு PM-KISAN லிஸ்ட்ல இருக்கான்னு பாக்கணுமா? இதெப்படி செக் பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
1️⃣ ஆபிஷியல் வெப்சைட்க்கு போங்க
👉 https://pmkisan.gov.in
2️⃣ “Farmers Corner”-ன்னு இருக்கும் அத க்ளிக் பண்ணுங்க
3️⃣ “Beneficiary List”-அ செலக்ட் பண்ணுங்க
4️⃣ உங்க மாநிலம், மாவட்டம், தாலுகா, கிராமம் எல்லாம் செலக்ட் பண்ணுங்க
5️⃣ “Get Report” க்ளிக் பண்ணுங்க
👉 உங்க பேரு இருந்துச்சுனா – உங்க 2000 ரூபாய் இன்ஸ்டால்மென்ட் வந்துரும் ✅
பேர் இல்லையா? அப்போ டக்குனு என்ன பண்ணனும்னு பாருங்க.
✔️ e-KYC முடிங்க சீக்கிரமா!
PM-KISAN வெப்சைட்ல OTP வச்சு பண்ணுங்க. அப்படி இல்லன்னா, பக்கத்துல இருக்குற CSC சென்டர் போங்க.
✔️ பேங்க்ல உங்க ஆதார் லிங்க் பண்ணிருக்காங்களான்னு செக் பண்ணுங்க.
உங்க பேரு, பிறந்த தேதி, பாலினம் எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாருங்க.
✔️ நிலத்தோட டீடெயில்ஸ் அப்டேட் பண்ணுங்க.
இதுக்கு தாலுகா ஆபீஸ் / வருவாய் ஆபீஸ் / அக்ரிகல்ச்சர் டிபார்ட்மெண்ட்ல மாத்திக்கோங்க.
✔️ அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ பாருங்க.
“Status of Self-Registered / CSC Farmers”ல போய் பார்த்தா தெரியும்.
⚠️ லேட் பண்ணீங்க, அவ்ளோதான்! இந்த தடவ பணம் வராம போய்டும்!
⚠️போலி வெப்சைட்களைப் பாத்து உஷாரா இருங்க!
❌ “உடனே உங்களுக்கு ரூ.2000 கிடைக்கும்”
❌ ” டக்குன்னு அப்ரூவல்”
னு சொல்ற லிங்க்ஸ், எஸ்எம்எஸ்லாம் நம்பாதீங்க.
✔️ இதுதான் ஒரிஜினல் வெப்சைட்: pmkisan.gov.in
✔️ உங்க OTP, ஆதார், பேங்க் டீடைல்ஸ் எதையும் யாருக்கும் சொல்லாதீங்க. ஜாக்கிரதை!
முடிவுரை
PM-KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகையான ரூ.2000 எப்போது வேண்டுமானாலும் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படலாம்.
அதற்கு முன்னதாக,
👉 உங்கள் பெயர் பயனாளிகள் பட்டியலில் இருக்கிறதா என்றும்
👉 e-KYC சரிபார்ப்பு முடிந்துவிட்டதா என்றும்
👉 உங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தது சரியாக உள்ளதா என்றும்
இன்றே வெறும் 10 நிமிடங்களில் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் ஒரு சிறிய கவனக்குறைவு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.
காலம் தாழ்த்தாமல் இன்றே சரிபாருங்கள் – ரூ.2000 உதவித்தொகையை தவறவிடாதீர்கள்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – PM Kisan
கே1. PM-KISAN திட்டத்தின் 21-வது தவணை எப்போது கிடைக்கும்?
👉 அரசாங்கத்தின் அறிக்கைப்படி, வெகுவிரைவில் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்படும்.
கே2. e-KYC செய்யாமல் இருந்தால் பணம் கிடைக்குமா?
👉 கிடையாது. e-KYC அவசியம் செய்ய வேண்டும்.
கே3. பெயர் பட்டியலில் என் பெயர் இல்லையென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?
👉 உடனடியாக e-KYC, ஆதார்-வங்கி இணைப்பு மற்றும் நிலம் தொடர்பான விவரங்கள் எல்லாவற்றையும் சரிபார்க்கவும்.
கே4. PM-KISAN உடைய அதிகாரப்பூர்வ இணைய முகவரி எது?
👉 https://pmkisan.gov.in