மத்திய ஆயுத காவல் படை (CAPF) வேலைவாய்ப்பு 2026: மொத்தம் 349 காலியிடங்கள்
UPSC CAPF Recruitment 2026-UPSC CAPF ஆட்சேர்ப்பு 2026: மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதக் காவல் படையில் தற்போது உள்ள 349 உதவி கமாண்டன்ட் (குரூப் ஏ) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைகளுக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் என இரு பாலினரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 12.03.2026-க்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்? தேவையான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற அனைத்து விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
ஆயுதப் படை காவல் பிரிவுகள் (CAPF):
மத்திய ஆயுதப் படை காவல் பிரிவானது (CAPF), இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏழு வகையான ஆயுதம் ஏந்திய காவல் பிரிவுகளை உள்ளடக்கியது. இந்த CAPF மூன்று விதமான குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: எல்லைப் பாதுகாப்புப் படைகள் (அஸ்ஸாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் சஷாஸ்திர சீமா பால்), உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் (மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை), மற்றும் அதிரடிப் பணிப் படை (தேசியப் பாதுகாப்புப் படை).
UPSC CAPF ஆட்சேர்ப்பு 2026
| Description(விவரக்குறிப்புகள்:) | Details |
| வேலைவாய்ப்புப் பிரிவு: | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மத்திய ஆயுதக் காவல் படைகள் Central Armed Police Forces |
| மொத்த காலிப் பணியிடங்கள் | 349 |
| பணி | Assistant Commandants (Group A) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் வாயிலாக |
| கடைசி நாள் | 12.03.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணைய முகவரி | https://upsc.gov.in/ |
UPSC CAPF ஆட்சேர்ப்பு 2026 – காலிப் பணியிடங்கள்:

மத்திய ஆயுதப் படை காவல் பிரிவின் (CAPF) வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, கீழ்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
| Assistant Commandants (Group A) | 349 |
வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் (Vacancy Details):
பாதுகாப்புப் படையில் (Force) உள்ள காலியிடங்களின் (Number of Vacancies) எண்ணிக்கை விவரம்:
- BSF (எல்லை பாதுகாப்புப் படை) – 108 இடங்கள்
- CRPF (Central Reserve Police Force) – 106 இடங்கள்
- ITBP (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை) – 12 இடங்கள்
- SSB (சாஸ்த்ர சீமா பல்) – 53 இடங்கள்
- CISF (மத்திய தொழிலக பாதுகாப்புப் படை) – 70 இடங்கள்
மொத்தமாக 349 இடங்கள் உள்ளன.
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
UPSC CAPF Recruitment 2026 – கல்வித் தகுதி:
CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026-ல் Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, இதற்கு இணையான தகுதி உடையவர்களும் இந்தத் தேர்வுக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
வயது வரம்பு பற்றிய விவரங்கள்:
பாதுகாப்புப் படையில் (Force) உள்ள காலியிடங்களின் (Number of Vacancies) எண்ணிக்கை விவரம்:
- BSF (எல்லை பாதுகாப்பு படை)-யில் 108 இடங்கள் காலியாக உள்ளன.
- CRPF (Central Reserve Police Force)-யில் 106 இடங்கள் உள்ளன.
- ITBP (இந்தோ-திபெத்திய எல்லை காவல்படை)-யில் 12 இடங்கள் காலியாக உள்ளன.
- SSB (சாஸ்த்ர சீமா பல்)-யில் 53 இடங்கள் உள்ளன.
- CISF (மத்திய தொழிலக பாதுகாப்பு படை)-யில் 70 இடங்கள் உள்ளன.
மொத்தமாக 349 இடங்கள் காலியாக உள்ளன.
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
UPSC CAPF Recruitment 2026 கல்வித் தகுதி பற்றிய விவரம்:
CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது, இதற்கு இணையான தகுதி உடையவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது குறித்த விவரங்கள்:
CAPF மத்திய ஆயுதக் காவல் படையில் 2026-ஆம் ஆண்டிற்கான உதவி கமாண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், 12.03.2026 அன்று குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 2 ஆகஸ்ட் 2001க்கு முன்பு அல்லது 1 ஆகஸ்ட் 2006க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:
அரசாங்க விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 வருடங்களும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 வருடங்களும் வயது தளர்வு அளிக்கப்படும். மேலும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசாங்க விதிமுறைகளின் படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள அளவீடு
CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 உதவி கமாண்டன்ட் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஆரம்ப அடிப்படைச் சம்பளமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வரை வழங்கப்படும். சம்பளம் பற்றிய கூடுதலான விவரங்களை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை
CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026 உதவி கமாண்டன்ட் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், கீழே தரப்பட்டுள்ள தேர்வு முறைகளின் படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- எழுத்துத் தேர்வு
- உடல் தகுதித் தேர்வுகள்
- உடல் திறன் தேர்வு (PET)
- நேர்காணல் / ஆளுமைத் தேர்வு
- மருத்துவத் தகுதித் தேர்வுகள்
- தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, மதுரை.
- விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 200/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் துவங்கும் நாள்: 20.02.2026
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்: 12.03.2026
தேர்வு நடைபெறும் நாள்: 19.07.2026
UPSC CAPF ஆட்சேர்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்கும் முறை:
CAPF மத்திய ஆயுதக் காவல் படை வேலைவாய்ப்பு 2026-க்குத் தேவையான தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களுடன் 20.02.2026 முதல் 12.03.2026 ஆகிய தேதிகளுக்குள் https://upsconline.gov.in/ இணையதளத்திற்குச் சென்று முதலில் Create Your Account என்ற பொத்தானை அழுத்திப் பதிவு செய்த பின்பு இணையம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும். மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் PDF வடிவில் பார்க்க Click Here
விண்ணப்பத்தை இணைய வழியில் நிரப்ப Click Here
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல Click Here
UPSC CAPF Recruitment 2026-FAQ (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்):
இந்த பணிக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதி என்னவாக இருக்க வேண்டும்?
ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
இதில் எவ்வளவு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன?
ஏறத்தாழ 349 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் எவ்வளவு வழங்கப்படும்?
ரூபாய் 56,100-லிருந்து அதிகபட்சமாக ரூபாய் 2,25,000 வரை (Level-10 Pay Scale) வழங்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு முறையை எந்த நிறுவனம் நடத்துகிறது?
யுபிஎஸ்சி (UPSC) எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்துகிறது.
எந்த மாதிரியான படைப்பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்?
பிஎஸ்எஃப் (BSF), சிஆர்பிஎஃப் (CRPF), சிஐஎஸ்எஃப் (CISF), ஐடிபிபி (ITBP), எஸ்எஸ்பி (SSB) போன்ற மத்திய ஆயுத காவல் படைகளில் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் முறைகள் என்னென்ன?
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு (PET), உடல் ஆரோக்கிய பரிசோதனை, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வு செய்யப்படுவர்.