Tamil Nadu Credit Guarantee Scheme(TNCGS Scheme) 2026 – MSMEs Get Loans up to ₹2 Crore with Government Guarantee

முதல்வர் ஸ்டாலின் அறிவித்த TNCGS திட்டம் – சிறு தொழில்களுக்கு பெரிய உதவி

TNCGS Scheme-தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் 2026 – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) நிதி உதவி அளிக்க TNCGS அமைப்பு.தமிழ்நாட்டுல சின்ன, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நல்லா வளரணும்னு ஒரு முக்கியமான விஷயமா தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) ஆரம்பிச்சாங்க.

நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin ஆகஸ்ட் 25, 2022 அன்னைக்கு இந்த திட்டத்தை ஆரம்பிச்சு வச்சாரு. MSME துறைக்கு பேங்க்ல கடன் வாங்கும்போது இருக்குற உத்தரவாத பிரச்சனைகளை குறைச்சு, தொழில் நல்லா வளர இது ஒரு முக்கியமான முயற்சி.

இந்த திட்டம் மூலமா சின்ன மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈஸியா பணம் உதவி வாங்க முடியும். அதுவும் புதுசா தொழில் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும்னு சொல்றாங்க.


🏭 தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் (TNCGS) பத்தி சில முக்கியமான விஷயங்கள்:

தமிழ்நாடு அரசு என்ன பண்ணுதுன்னா, மத்திய அரசு இருக்குல்ல அவங்களோட Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) கூட சேர்ந்து இந்த திட்டத்த அமல்படுத்துறாங்க.


💰 கடன் உத்தரவாதம் எவ்ளோ இருக்கும்

₹40 லட்சம் வரைக்கும் கடன் வாங்கினா → அரசு 90% உத்தரவாதம் கொடுக்கும்.

₹40 லட்சத்திலிருந்து ₹2 கோடி வரைக்கும்னா → அரசு 80% உத்தரவாதம் கொடுக்கும்.

இந்த திட்டத்துக்காக நம்ம மாநில அரசு ₹100 கோடி ஒதுக்கியிருக்காங்க.

அதுமட்டுமில்ல, கடன் வாங்குறவங்களோட நிதி நிலைமை, அவங்க ஏற்கனவே வாங்குன கடன் வரலாறு இத வச்சி ஒரு சூப்பரான credit score உருவாக்குற மாதிரியும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.


🏦 வங்கிகள் அப்புறம் ERP தளம்லாம் என்ன பண்ணும்?

இந்த திட்டத்துல, நம்ம தேசிய வங்கிகள் எல்லாம் MSME கம்பெனிகளுக்கு கடன கொடுக்க ஆரம்பிப்பாங்க. பெரிய கம்பெனிகள் கிட்ட இருந்து MSME களுக்கு வர வேண்டிய காசு லேட்டானா, அத சரி பண்றதுக்காக ERP (Enterprise Resource Planning) தளம் ஒன்னு ரெடி பண்ணியிருக்காங்க.

அந்த தளத்துல:

  • நம்ம பொதுத்துறை கம்பெனிகள்
  • சட்டப்பூர்வ வாரியங்கள்
  • கூட்டுறவு அமைப்புகள்

எல்லாத்தையும் ஒன்னு சேத்துருவாங்க.


🧵 தமிழ்நாடு தென்னை நார் வணிகத்தை உயர்த்துவதற்கான கழகம்.

MSME நல்லா வளரணும்னு, நம்ம மாநில அரசு தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகம்னு ஒரு புது கம்பெனியவே ஆரம்பிச்சுட்டாங்க. திருப்பூர்ல நாலு தென்னை நார் கிளஸ்டர்ஸ் அறிமுகப்படுத்திருக்காங்கலாம்.

அது மட்டும் இல்ல, வீட்டு ஜவுளித் துறைய ஊக்குவிக்கிற மாதிரி, அதுக்கு ஒரு ஸ்பெஷல் மானியம் வேற கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.

வீட்டு ஜவுளி துறையில உற்பத்தி மட்டும் ₹10,000 கோடி இருக்கும்.

ஏற்றுமதி பாத்தீங்கன்னா ₹4,000 கோடிக்கு மேல இருக்கும்.


💼 TNTReDS – வணிகம் சார்ந்த ரசீதுகள் மீதான தள்ளுபடி திட்டம்.

தமிழ்நாடு அரசு இப்போ TNTReDS (Tamil Nadu Trade Receivables Discounting System)னு ஒரு புதுசா ERP தளத்த போட்டு இருக்காங்க.

இதனால என்னலாம் ஆகும்னா:

MSME களுக்கு வரவேண்டிய காசு சீக்கிரமே கெடைக்கும்.

Bill discounting வசதி எல்லாம் இருக்கு.

அரசாங்க கம்பெனிகளோட டைரக்டா கனெக்ட் பண்ணிக்கலாம்.


📈 இதனால முதலீடு வரும், வேலைவாய்ப்பு வரும்.

நம்ம தமிழ்நாட்டுல தொழில் நல்லா வளரணும்னு சொல்லிட்டு போன 15 மாசத்துல மட்டும்:

221+ அக்ரிமெண்ட் போட்டு இருக்காங்கலாம்.

₹2.2 லட்சம் கோடி முதலீடு பண்ண போறாங்களாம்.

3 லட்சம் பேருக்கு வேலை கெடைக்க போகுதாம்.

அதுல MSMEல மட்டும்:

₹1,300 கோடி முதலீடு

1,909 பேருக்கு வேலை வாய்ப்பு கெடைக்க போகுது.

திட்டத்தின் பயன்கள்

✔ எந்த உத்தரவாதமும் இல்லாம கடன் வாங்கலாம்.

MSME நல்லா வளரும்.

புதுசா தொழில் தொடங்க ஹெல்ப் பண்ணுவாங்க.

✔ நிறைய பேருக்கு வேலை கெடைக்கும்.

இந்த திட்டம் தமிழ்நாட்டோட தொழில் வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம்னு சொல்றாங்க.


இந்த இணையதளத்தில் நீங்கள் பார்க்கலாம்:(🔗 Official Link – Tamil Nadu Credit Guarantee Scheme (TNCGS))

  • திட்டத்தின் முழு விவரம்
  • தகுதி நிபந்தனைகள்
  • விண்ணப்ப செயல்முறை
  • MSME களுக்கு கிடைக்கும் நிதி உதவி விவரங்கள்

👉 நிதித் துறை- செய்தி செளியீடுmsmeonline


❓ FAQ – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Q1. TNCGS திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

👉 25 ஆகஸ்ட் 2022.

Q2. ₹40 லட்சம் வரை கடனுக்கு எவ்வளவு உத்தரவாதம்?

👉 90%.

Q3. ₹2 கோடி வரை கடனுக்கு எவ்வளவு உத்தரவாதம்?

👉 80%.

Q4. இந்த திட்டம் யாருக்காக?

👉 MSME தொழில்களுக்காக.

Q5. TNTReDS என்ன?

👉 MSME களுக்கு பணம் விரைவில் கிடைக்க உதவும் தளம்.

Leave a Comment