RRB Group D Recruitment 2026: 22,195 பணியிடங்கள் – இப்பொழுதே இணையத்தில் விண்ணப்பிக்கவும்
Table of Contents
RRB Group D Recruitment 2026 – 22,195 உதவியாளர் / குரூப் D பணியிடங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRB) வாயிலாக அறிவிப்பு எண்: 09/2025 வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி, இந்திய ரயில்வே துறையில் Level-1 (Group D)வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக 22,195 காலி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
RBI Assistant Recruitment 2026 – Apply Online
இது ஒரு மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆகும். பத்தாம் வகுப்பு / ITI / NAC படித்தவர்கள் எல்லோரும் rrbchennai.gov.in விண்ணப்பிக்கலாம். இந்திய ரயில்வேயில் நிரந்தரமான பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
முக்கிய விவரங்கள் – Summary
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பு | Railway Recruitment Boards (RRB) |
| அறிவிப்பு எண் | 09/2025 |
| வேலைவாய்ப்பின் பெயர் | Level-1 (Group D) |
| மொத்த காலியிடங்கள் | 22,195 |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலை |
| சம்பளம் | ₹18,000 + Allowances |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் – Online |
| வேலை இடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | 31 ஜனவரி 2026 |
| கடைசி தேதி | 09 மார்ச் 2026 (இரவு 11:59 மணி) |
காலிப்பணியிட விவரம் – Vacancy Details
| வேலை பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
|---|---|
| Level-1 (Group D) | 22,195 |
| மொத்த காலிப்பணியிடங்கள் | 22,195 |
மண்டல வாரியான (Region-wise) காலிப்பணியிடங்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி– Educational Qualification
கீழ்க்காணும் ஏதேனும் ஒரு தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்:
- 10ம் வகுப்பு (SSLC / Matriculation)
- ITI (NCVT / SCVT) (தேசிய தொழில் பயிற்சி சபை / மாநில தொழில் பயிற்சி சபை)
- தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) – National Apprenticeship Certificate (NAC)
*** உடல் தகுதி தேர்வுக்கான PET (Physical Efficiency Test)விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
RBI Assistant Recruitment 2026 – Apply Online
வயது வரம்பு – வயது எல்லை (01-01-2026 தேதியின்படி):
| பிரிவு | வயது வரம்பு |
|---|---|
| பொதுப்பிரிவு (General) | 18 – 33 வயது |
| SC/ST | +5 வருடங்கள் சலுகை |
| OBC | +3 வருடங்கள் சலுகை |
| PwBD (Gen/EWS) | +10 வருடங்கள் |
| PwBD (SC/ST) | +15 வருடங்கள் |
| PwBD (OBC) | +13 வருடங்கள் |
| Ex-Servicemen | அரசு விதிப்படி |
சம்பளம் – Salary & Pay Scale
- Pay Level: Level-1
- அடிப்படை சம்பளம்: ₹18,000
- Allowances உடன்: ₹25,000 – ₹35,000 (மொத்தம்)
கூடுதல் சலுகைகள்:
- DA (Dearness Allowance)
- HRA (House Rent Allowance)
- Travel Pass
- Medical Facilities
- Pension Benefits
PSG Polytechnic College Recruitment 2026 – 17 Lecturer, Junior Assistant & Lab Assistant Posts
தேர்வு செய்யப்படும் முறை – தேர்வு நடைமுறை – Selection Process
RRB Group D தேர்வு நான்கு கட்டங்களாக நடைபெறும்:
1️⃣ Computer Based Test (CBT)
2️⃣ Physical Efficiency Test (PET)
3️⃣ Certificate Verification
4️⃣ Medical Examination
CBT தேர்வு விவரம்:
- 100 கேள்விகள்
- 90 நிமிடங்கள்
- Negative Mark: 1/3
பாடப்பிரிவுகள்:
- கணிதம் (Maths)
- Reasoning
- General Science
- General Knowledge
- Current Affairs
PET (Physical Test) விவரம்
ஆண் விண்ணப்பதாரர்கள்:
- 1000 மீட்டர் ஓட்டம்
- எடையை தூக்கும் தேர்வு
பெண் விண்ணப்பதாரர்கள்:
- 1000 மீட்டர் ஓட்டம் (நேர அளவு மாறுபடும்)
- குறைந்த எடை தூக்கும் தேர்வு
(அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டிப்பாக பார்க்கவும்)
விண்ணப்பிக்கும் முறை – How to Apply Online
விண்ணப்பிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
- உங்கள் பிராந்திய RRB இணையதளத்திற்குச் செல்லவும் (உதா: rrbchennai.gov.in)
- CEN 09/2025 அறிவிப்பு பகுதியில் செல்லவும்
- “New Registration” என்பதைக் கிளிக் செய்யவும்
- பதிவு செய்து Registration Number & Password ஐப் பெறவும்
- Login செய்து முழு விண்ணப்பத்தை நிரப்பவும்
- Photo, Signature & Documents upload செய்யவும்
- விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்
- 09-03-2026 தேதிக்குள் Submit செய்யவும்

முக்கிய இணைப்புகள்: RRB Group D (Level-1) Recruitment 2026 – Important Links
RRB சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம்- Visit Now
விண்ணப்பத் தேதி அறிவிப்பு – Check Now
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Access Now
Apply Online – Apply Here
விண்ணப்ப கட்டணம் – Application Fee
| பிரிவு | கட்டணம் |
|---|---|
| General / OBC | ₹500 |
| SC / ST / PwBD / பெண்கள் | ₹250 (Refundable) |
முக்கியமான நாட்கள் – Important Dates
- விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கும் நாள்: 31 ஜனவரி 2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 மார்ச் 2026 (11:59 PM)
ஏன் Indian Railways வேலை தேர்ந்தெடுக்க வேண்டும்?
- உலகிலேயே மிகப்பெரிய Railway Network
- நிரந்தர அரசு வேலை
- பதவி உயர்வு வாய்ப்பு
- இலவச பயண அட்டை
- மருத்துவ வசதி
- Pension & Family Security
Group D பணியாளர்கள் பின்னர் Track Maintainer, Technician போன்ற பதவிகளுக்கு பதவி உயர்வு பெறலாம்.
RRB Group D 2026 தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள்
✅ 10ம் வகுப்பு பாடங்களை நன்றாக revise செய்யவும்
✅ தினமும் mock test practice செய்யவும்
✅ Current Affairs தினமும் படிக்கவும்
✅ Negative marking கவனத்தில் கொள்ளவும்
✅ PET தேர்வுக்காக உடற்பயிற்சி செய்யவும்
✅ ஆவணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும்
முக்கியமான அறிவுரை
சீக்கிரமாக விண்ணப்பியுங்கள். உங்களுக்கு அருகில் உள்ள RRB மற்றும் தேர்வு நகரத்தை தேர்ந்தெடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்- RRB Group D FAQ (Short)
Q1. 2026 RRB குரூப் D பதவிக்கு யார் விண்ணப்பம் செய்யத் தகுதியானவர்கள்?
பத்தாம் வகுப்பு அல்லது ITI அல்லது NAC சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Q2. வயதுக்கான உச்ச வரம்பு என்ன?
18 முதல் 33 வயது வரை (விதிமுறைகளின்படி தளர்வு உண்டு).
Q3. மாதச் சம்பளம் எவ்வளவு தரப்படும்?
₹18,000 மற்றும் இதர படிகள்.
Q4. தேர்வுக்கான வழிமுறை என்ன?
CBT → PET → Document Verification → Medical.
Q5. விண்ணப்பிக்கக் கடைசி நாள் எப்போது?
மார்ச் 9, 2026 (இரவு 11:59 மணி).