NITTTR சென்னை வேலைவாய்ப்பு 2026 – 10வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை | ₹56,900 சம்பளம்
10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசின் ஒரு சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. National Institute of Technical Teachers Training and Research (NITTTR) சென்னை, இது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழியங்கும் ஒரு முக்கியமான தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். தற்போது 2026-ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி Multi-Tasking Staff (MTS) மற்றும் Technical Assistant Grade-I (Junior Engineer – Civil) உட்பட மொத்தம் 12 காலிப் பணியிடங்கள் இருக்குறதை நிரப்ப இருக்காங்க.
பத்தாவது பாஸ் பண்ணவங்ககூட இந்த மத்திய அரசு வேலைக்கு அப்ளை பண்ணலாம். அதனால வேலை தேடிட்டு இருக்க இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்த பதிவுல என்ன மாதிரியான படிப்பு வேணும், வயசு என்ன இருக்கணும், சம்பளம் எவ்ளோ, எப்படி செலக்ட் பண்ணுவாங்க, அப்ளை பண்றது எப்படின்னு எல்லா விவரத்தையும் தெளிவா பார்க்கலாம் வாங்க.
நிறுவனம் தொடர்பான விவரங்கள்

நிறுவனம்: National Institute of Technical Teachers Training and Research (NITTTR), சென்னை
வேலை வாய்ப்பு: மத்திய அரசு வேலை
வேலை செய்யுற இடம்: சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.nitttrc.ac.in/
மொத்த காலி இடங்கள்: 12
NITTTR நிறுவனமானது இந்தியாவோட டெக்னிக்கல் டீச்சர்ஸுக்கு ட்ரைனிங் கொடுக்கிற முக்கியமான ஒரு நிறுவனம். இது நிறைய ரிசர்ச் மற்றும் எஜுகேஷன் சம்பந்தப்பட்ட வேலைகளையும் செஞ்சுட்டு இருக்கு.
காலிப் பணியிடங்கள் பத்தின விவரங்கள்
வேலை பெயர் காலியிடங்கள்
- Technical Assistant Gr. I (Jr. Engineer – Civil) 1
- Multi-Tasking Staff (MTS) 11
என்ன படிச்சிருக்கணும்
🔹 Technical Assistant Gr. I (JE – Civil)
பி.இ (Civil) அல்லது டிப்ளமோ (Civil) முடிச்சிருக்கணும்.
🔹 Multi-Tasking Staff (MTS)
10-வது பாஸ் பண்ணிருக்கணும் (SSLC).
👉 வெறும் 10-வது முடிச்சவங்களுக்கு கூட அரசு வேலை கிடைக்கும்ங்குறது இந்த அறிவிப்போட முக்கியமான விஷயம்.
வயசு என்ன இருக்கணும்
வேலையின் பெயர் அதிகபட்ச வயது
- Technical Assistant Gr. I 40 வயசு
- MTS 35 வயசு
- வயசுல சலுகை
- SC / ST – 5 வருஷம்
- OBC – 3 வருஷம்
- PwBD – அதிகபட்சம் 10 லிருந்து 15 வருஷம் வரை
சம்பளம் எவ்ளோ கிடைக்கும்
வேலையின் பெயர் சம்பளம்
- Technical Assistant Gr. I ₹35,400 – ₹1,12,400
- Multi-Tasking Staff (MTS) ₹18,000 – ₹56,900
👉 இது மத்திய அரசு பே லெவல் படி சம்பளம். இது கூட DA, HRA மாதிரி நிறைய அலவன்ஸ்களும் கிடைக்கும்.
எப்படி செலக்ட் பண்ணுவாங்க
உங்கள கீழ இருக்கற முறையில தேர்ந்தெடுப்பாங்க:
- எழுத்துத் தேர்வு
- திறன் தேர்வு (Skill Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இறுதியாக நியமனம் பெறுவார்கள்.
விண்ணப்பத்திற்கான கட்டணம்
- SC / ST / Ex-Servicemen / PwBD – காசு இல்ல
- மத்தவங்க:
- Technical Assistant – ₹500
- MTS – ₹300
முக்கியமான நாட்கள்
- விண்ணப்பம் ஆரம்பிக்கிற தேதி – 14.02.2026
- ஆன்லைன்ல விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.03.2026
- ஹார்ட்காப்பி அனுப்ப வேண்டிய கடைசி தேதி – 23.03.2026
எப்படி அப்ளை பண்றது (How to Apply)
ஸ்டெப் 1 – ஆன்லைன்ல ரெஜிஸ்டர் பண்ணுங்க.
NITTTR ஓட அதிகாரப்பூர்வ வெப்சைட்ல போயி ஆன்லைன்ல அப்ளை பண்ணனும்.
ஸ்டெப் 2 – விண்ணப்பத்தை டவுன்லோட் பண்ணுங்க.
ஆன்லைன்ல பூர்த்தி செஞ்ச விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து வெச்சுக்கோங்க.
ஸ்டெப் 3 – டாக்குமெண்ட்ஸ் இணைக்கவும்.
உங்களுடைய படிப்பு சர்டிபிகேட்ஸ் மற்றும் தேவையான டாக்குமெண்ட்ஸோட நகல்களை சைன் பண்ணி இணைக்கணும்.
ஸ்டெப் 4 – தபால்ல அனுப்புங்க.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இந்த அட்ரஸுக்கு அனுப்பணும்:
****The Director, NITTTR, Taramani, Chennai – 600113
Envelop மேல “Application for the post of __” ன்னு எழுதணும்.
இந்த வேலை ஏன் ஸ்பெஷல்?
மத்திய அரசு நிரந்தர வேலை
10-வது பாஸ் பண்ணவங்களுக்கும் வாய்ப்பு
நல்ல சம்பளம் + அலவன்ஸ்
சென்னை தான் வேலை செய்யுற இடம்
முன்னனுபவம் தேவையில்ல (MTSக்கு)
IMPORTANT LINKS
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF ஐப் பார்க்க | Click here |
| online விண்ணப்ப படிவம் | Click here |
| Information to the Candidates for Technical Assistant: தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் தகவல்கள் | Click here |
| Instruction to the Candidates for Technical Assistant: | Click here |
| Information to the Candidates for Multi-Tasking Staff (MTS): தொழில்நுட்ப உதவியாளருக்கான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்: | Click here |
| Multi-Tasking Staff (MTS) வேலைக்கு ஆள் எடுக்கறதுக்கான சில முக்கியமான விஷயங்கள்: | Click here |
| அதிகாரப்பூர்வமான இணையத்தளம். | Click here |
முடிவுரை
10-ஆம் வகுப்பு முடிச்சிட்டு கவர்ன்மெண்ட் ஜாப் தேடிட்டு இருக்கீங்களா? அப்போ NITTTR Chennai Recruitment 2026 உங்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு. கம்மியான படிப்புல நல்ல சம்பளத்துல மத்திய அரசு வேலை கிடைக்கிறதால தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்-(NITTTR Chennai Recruitment 2026)
1️⃣ NITTTR சென்னை வேலைவாய்ப்பு 2026 என்றால் என்ன?
தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) சென்னை, மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் MTS மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2️⃣ இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் (MTS), டிப்ளமோ / B.E சிவில் படித்தவர்கள் (Technical Assistant) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
3️⃣ எவ்வளவு ஊதியம் கிடைக்கும்?
MTS பணிக்கு ₹18,000 முதல் ₹56,900 வரையிலும், Technical Assistant பணிக்கு ₹35,400 முதல் ₹1,12,400 வரையிலும் மாத ஊதியம் வழங்கப்படும்.
4️⃣ வயது வரம்பு என்னவாக இருக்க வேண்டும்?
MTS பணிக்கு – 35 வயது வரை
Technical Assistant பணிக்கு – 40 வயது வரை
(அரசு விதிகளின்படி வயது சலுகை உண்டு)
5️⃣ எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
எழுத்துத் தேர்வு, திறமை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
6️⃣ விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 13, 2026
ஹார்ட்காப்பி அனுப்ப வேண்டிய கடைசி தேதி: மார்ச் 23, 2026
7️⃣ விண்ணப்பம் செய்வது எப்படி?
முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து, பின்பு அதனை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
8️⃣ இது மத்திய அரசாங்க வேலையா?
ஆமாம், இது கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு.