Iran-Israel tensions push Adani Total Gas to raise prices

ஈரான்–இஸ்ரேல் போர் தாக்கம்: நிறுவனங்களுக்கு எரிவாயு விலையை உயர்த்தியது அதானி டோட்டல் காஸ்

Adani Total Gas to raise prices: புது டெல்லி: மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக, தொழில் நிறுவன நுகர்வோருக்கான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) விலையை அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனம் தெரிவித்த தகவல்களின்படி, இப்பொழுது இருக்கிற பூகோள அரசியல் நிலைமையால் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

குறிப்பா சொல்வதென்றால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் மூவ்மெண்ட் பாதிக்கப்பட்டதால எரிவாயு சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்கள்.

கூடுதலாக ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரிகரிக்க தொடங்கியதன் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன.

இதன் காரணமாக எரிவாயுவை விநியோகம் செய்யும் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டதால், வணிகங்களுக்கான LNG விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகத்தின் மொத்த எரிசக்தி போக்குவரத்தில் சுமார் 20% நடைபெறுகிறது. இந்த பாதைக்கு இடையூறு ஏற்பட்டதால் பல நாடுகள் எரிசக்தி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Comment