HLL Lifecare Recruitment 2026: 40 Management Trainee Vacancies

HLL லைஃப்கேர் வேலைவாய்ப்பு 2026: 40 மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்கள்

HLL Lifecare Recruitment 2026: 40 Management Trainee Vacancies | Salary 40,000+மத்திய அரசாங்கத்தின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் HLL Lifecare Limited (எச்எல்எல் லைஃப்கேர்) நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு 40 காலியிடங்களை நிரப்புவதற்குரிய வேலைவாய்ப்பு அறிக்கை 2026 வெளியிடப்பட்டிருக்கிறது.

சுகாதார உபகரணங்கள், கருத்தடை பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் உற்பத்தி செய்வதில் இந்தியாவின் முக்கியமான மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றாக இது உள்ளது.

இன்ஜினியரிங் முதல் மார்க்கெட்டிங் வரை பல துறைகளில் டிகிரி முடித்த இளைஞர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பாகும்.

HLL Lifecare வேலைவாய்ப்பு 2026 – முக்கியமான விவரங்கள்

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு மொத்தம் 40 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலை வாய்ப்புகள் இன்ஜினியரிங், பார்மா, மார்க்கெட்டிங், மனித வளம், சமூகப் பணி, டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற பல துறைகளில் உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: எச்எல்எல் லைஃப்கேர்
பணியின் பெயர்: மேனேஜ்மெண்ட் டிரெய்னி
மொத்த காலிஇடங்கள்: 40
துறை: மத்திய அரசு சுகாதாரத் துறை
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.lifecarehll.com/

துறை சார்ந்த காலியிடங்கள்

HLL Lifecare Recruitment 2026
  • பொறியியல் – 17
  • பார்மா – 6
  • சந்தைப்படுத்துதல் – 10
  • மனிதவளம் – 2
  • சமூகப் பணி – 1
  • தரவுப் பகுப்பாய்வு – 1
  • உணவக மேலாண்மை – 3

மேலும், இந்த வேலைகள் சமுதாய இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும்:

  • பொதுப் பிரிவு – 14
  • ஓபிசி – 11
  • எஸ்சி – 6
  • எஸ்டி – 3
  • EWS – 4
  • மாற்றுத் திறனாளிகள் – 2

வயது வரம்பு

01.02.2026 அன்றைய நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 27 ஆக இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு அரசாங்க விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி – துறை ரீதியாக

  1. பொறியியல்

கெமிக்கல், மெக்கானிக்கல், மெக்காட்ரானிக்ஸ், பயோமெடிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், சிவில், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பார்மா

பி.பார்ம் பட்டப்படிப்பை 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

3. சந்தைப்படுத்துதல்

சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் MBA / PG Diploma / MIB / MPIB முடித்திருக்க வேண்டும்.

4. மனித வளம் (HR)

HR MBA அல்லது சமூகப்பணி முதுகலை / PM&IR / MHRM போன்ற படிப்புகளை முடித்திருக்கலாம்.

5. சமூகப் பணி

மருத்துவம் மற்றும் உளவியல் துறையில் சமூகப் பணி முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

6. தரவுப் பகுப்பாய்வு

கணிதம் அல்லது புள்ளியியல் பட்டப்படிப்புடன் MBA (Data Analytics) அல்லது அதனுடன் தொடர்புடைய தகுதி பெற்றிருக்க வேண்டும்.

7. உணவக மேலாண்மை

அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்புடன் முழுநேர MBA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

மத்திய அரசு நிறுவனம் என்பதனால் தேர்வு முறையும் பல கட்டங்களாக நடைபெறும்:

  • கணினி வழியிலான தேர்வு (CBT) – 100 மதிப்பெண்கள்
  • பொதுவான திறன் – 50 கேள்விகள்
  • துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் – 50

தேர்ச்சி பெறும் மதிப்பெண்:

  • பொதுப் பிரிவு – 50%
  • ஓபிசி – 40%
  • எஸ்சி/எஸ்டி – 35%
  • முதல் கட்ட நேர்காணல்
  • சைக்கோமெட்ரிக் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு & இறுதி நேர்காணல்

இவை அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தவர்கள் இறுதித் தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

சம்பளம் மற்றும் பதவி உயர்வு

மேனேஜ்மெண்ட் டிரெய்னி பதவியில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ.40,000 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் பஞ்சப்படி மற்றும் இதர சலுகைகளும் கிடைக்கும்.

  • பயிற்சிக் காலம் – 1 வருடம்
  • பயிற்சி முடிந்த பிறகு – டெபியூட்டி மேலாளர் பதவி
  • சம்பள அளவு – ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை

மத்திய அரசு நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதனால் இது ஒரு மிகப்பெரிய கரியர் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கிய நாள்: 18 பிப்ரவரி 2026
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 மார்ச் 2026
  • தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும்

ஏன் இந்த வேலை முக்கியத்துவம் வாய்ந்தது?

HLL லைஃப்கேர் நிறுவனம் இந்தியாவில் குடும்ப நல திட்டங்கள், கருத்தடை சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பதில் முக்கியமான நிறுவனம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் வேலைப் பாதுகாப்பு, நிறைவான சம்பளம், பதவி உயர்வு போன்ற வாய்ப்புகள் அதிகம்.

முடிவுரை:

பொறியியல், பார்மா, சந்தைப்படுத்துதல், HR போன்ற பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. போதுமான சம்பளம், நிரந்தர வேலை மற்றும் பதவி உயர்வு வாய்ப்புடன் இருக்கும் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்கவும்.

❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) – HLL Lifecare வேலைவாய்ப்பு 2026

1️⃣ இந்த வேலை எந்த நிறுவனத்தில்?

இந்த வேலை மத்திய அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் HLL Lifecare Limited நிறுவனத்தில்.

2️⃣ எந்த பதவிக்கான ஆட்சேர்ப்பு?

மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainee) பதவிக்கான ஆட்சேர்ப்பு.

3️⃣ மொத்த காலிப்பணியிடங்கள் எத்தனை?

மொத்தம் 40 காலிப்பணியிடங்கள்.

4️⃣ எந்த துறைகளில் பணியிடங்கள் உள்ளன?

பொறியியல், பார்மா, மார்க்கெட்டிங், மனித வளம், சமூகப் பணி, தரவு பகுப்பாய்வு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் போன்ற துறைகளில் இருக்கு.

5️⃣ வயது வரம்பு என்ன?

01.02.2026 அன்றைய தேதிப்படி, அதிகபட்ச வயசு 27 வருஷம். SC / ST / OBC / PwD விண்ணப்பதாரர்களுக்கு வயதுல தளர்வு இருக்கு.

6️⃣ கல்வித் தகுதி என்ன?

சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி அல்லது முதுகலை பட்டம் (Engineering / B.Pharm / MBA / MSW இந்த மாதிரி) இருக்கணும்.

7️⃣ தேர்வு முறை எப்படி இருக்கும்?

கணினி வழியில் தேர்வு (CBT), நேர்காணல், சைக்கோமெட்ரிக் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுப்பாங்க.

8️⃣ CBT தேர்வில் எத்தனை கேள்விகள்?

மொத்தம் 100 கேள்வி இருக்கும்: பொதுத் திறன் – 50, துறை சம்பந்தமான கேள்விகள் – 50.

9️⃣ தேர்ச்சி பெற வேண்டிய மதிப்பெண்?

பொதுப்பிரிவினருக்கு – 50%, OBC – 40%, SC / ST – 35% எடுக்கணும்.

🔟 சம்பளம் எவ்வளவு?

பயிற்சி காலத்துல மாசம் சுமார் ரூ.40,000 கிடைக்கும். பயிற்சி முடிஞ்சதும் டெபியூட்டி மேனேஜரா ரூ.40,000 – ரூ.1,40,000 வரை கிடைக்கும்.

1️⃣1️⃣ பயிற்சி காலம் எவ்வளவு?

1 வருஷம்.

1️⃣2️⃣ விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

பொதுப்பிரிவு / OBC / EWS – ரூ.1,000, SC / ST / PwD – கட்டணம் கிடையாது.

1️⃣3️⃣ எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

1️⃣4️⃣ விண்ணப்பிக்க கடைசி தேதி?

10 மார்ச் 2026

1️⃣5️⃣ இது மத்திய அரசு வேலைவாய்ப்பா?

ஆமாம், இது மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை.

Leave a Comment