Table of Contents
DHS மயிலாடுதுறை வேலைவாய்ப்பு 2026 – 20 பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்
DHS Mayiladuthurai Jobs 2026: மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் (DHS மயிலாடுதுறை) 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதில் மொத்தம் 20 ஒப்பந்த அடிப்படையிலான (Contract Basis) பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த வேலைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
RRB Group D Recruitment 2026 – Apply Online
இந்த அறிவிப்பின் கீழ் Staff Nurse, Psychiatric Nurse, Clinical Psychologist, Radiographer, Physiotherapist, AYUSH Pharmacist உட்பட பல பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை (Offline)
கடைசி நாள்: மார்ச் 09, 2026
மாத சம்பளம்: ₹11,000 – ₹23,800 (ஒருங்கிணைந்த)
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
முக்கிய குறிப்புகள்– Quick Summary
| விவரம் | தகவல் |
| அமைப்பு | District Health Society, Mayiladuthurai |
| வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பணியிடம் | மயிலாடுதுறை |
| மொத்த பணியிடங்கள் | 20 |
| வேலை விவரம் | ஒப்பந்த அடிப்படையில் |
| தேர்வு செய்யும் முறை | நேர்காணல் (Interview) |
| கடைசி நாள் | 09-03-2026 |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | mayiladuthurai.nic.in |
பதவிக்கு ஏற்ப காலியாக உள்ள பணியிடங்கள்
| பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
| Psychiatric Nurse | 1 |
| Clinical Psychologist | 1 |
| Psychiatric Social Worker | 1 |
| Data Entry Operator & Junior Assistant | 1 |
| Multipurpose Health Worker (Male) | 1 |
| Dispenser / Pharmacist (AYUSH) | 5 |
| Radiographer | 1 |
| Staff Nurse | 8 |
| Physiotherapist | 1 |
| மொத்த காலிப்பணியிடங்கள் | 20 |
👉 Staff Nurse -க்கு 8 இடங்கள் அதிகம் இருப்பதால் நர்சிங் படித்தவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
Supreme Court of India Recruitment 2026 – 22 Assistant Librarian & Other Posts Apply Online
கல்வித் தகுதி – Post Wise Qualification
உதவி செவிலியர்- Staff Nurse
- B.Sc Nursing அல்லது GNM முடித்திருக்க வேண்டும்.
மனநல செவிலியர் (Psychiatric Nurse)
- B.Sc Nursing / GNM (மனநல பிரிவில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு).
மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist)
- M.Sc / MA / M.Phil in Clinical Psychology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மனநல சமூக சேவகர் (Psychiatric Social Worker)
- MA in Psychiatric Social Work
மனநல சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் உள்ளீட்டு செய்பவர் & இளநிலை உதவியாளர் (Data Entry Operator & Junior Assistant)
- ஏதேனும் Degree + Computer Knowledge
Multipurpose Health Worker (Male)
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
AYUSH Pharmacist
- ஆயுஷ் மருந்தகத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
கதிரியக்க வரைவாளர் (Radiographer)
- B.Sc Radiography (பி.எஸ்சி ரேடியோகிராபி முடித்திருக்க வேண்டும்.)
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist)
- பிபிடி (Bachelor of Physiotherapy) முடித்திருக்க வேண்டும்.
RBI Assistant Recruitment 2026 – Apply Online
வயது வரம்பு
- வயது வரம்பு அரசாங்க விதிமுறைகளின்படி இருக்கும்.
- வயது தளர்வு அரசாங்க நியமன விதிகளின்படி வழங்கப்படும்.
- மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
மாத சம்பளம் (Consolidated Salary)
| பதவி | மாத சம்பளம் (₹) |
| மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist) | 23,800 |
| மனநல சமூக சேவகர் (Psychiatric Social Worker) | 23,000 |
| உதவி செவிலியர் (Staff Nurse) | 18,000 |
| மனநல செவிலியர் (Psychiatric Nurse) | 18,000 |
| ஆயுஷ் மருந்தாளுநர் (AYUSH Pharmacist) | 15,000 |
| பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) – | 15,000 |
| தகவல் உள்ளீட்டு செய்பவர் (Data Entry Operator) | 13,500 |
| MPHW (ஆண்) | 11,000 |
| கதிரியக்க வரைவாளர் (Radiographer) – விதிமுறைகளின் படி | விதிமுறையின்படி |
தேர்வு முறை – Selection Process
✔ நேர்காணல் (Interview) மட்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை – How to Apply Offline
1️⃣ mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
2️⃣ விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பவும்.
3️⃣ தேவையான ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்.
- கல்வி சான்றிதழ்
- மதிப்பெண் பட்டியல்
- வயது சான்று
- அடையாள அட்டை
- சாதி சான்று (தேவைப்பட்டால்)
- புகைப்படம்
4️⃣ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
Executive Secretary
District Health Society
District Health Office
7th Floor, Collectorate Campus
Mannampandal
Mayiladuthurai – 609305
கடைசி தேதி: 09 மார்ச் 2026
நேரிலோ அல்லது Registered Post / Speed Post மூலமாகவோ அனுப்பலாம்.

முக்கியமான இணைப்புகள் -DHS Mayiladuthurai Recruitment 2026
அதிகாரப்பூர்வ வலைத்தளம் – Official Website Visit Now
அதிகாரப்பூர்வ அறிவிக்கை – Official Notification Access Now
விண்ணப்பப் படிவம் – Application Form Download Now
முக்கியமான நாட்கள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 09 மார்ச் 2026
- தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
ஏன் DHS மயிலாடுதுறை வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்?
- இது மாவட்ட சுகாதாரத்துறையில் ஒரு அரசாங்க வேலைவாய்ப்பு
- பொதுமக்களுக்கு சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பு
- மருத்துவம், உளவியல் மற்றும் AYUSH போன்ற துறைகளில் வேலை அனுபவம் பெறலாம்
- வேலையை நிரந்தரமாக தொடர வாய்ப்புகள் உள்ளன
- மயிலாடுதுறை – கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க பகுதி
Interviewக்கு தயாராகும் முறைகள்
✔ உங்களுடைய பாடத்திட்டத்தின் அடிப்படைகளை முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள்
✔ நர்சிங் அடிப்படைகள், நோயாளிகளை கவனிப்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்
✔ மனநல விழிப்புணர்வு (மனோதத்துவ பதவிகளுக்கு)
✔ பிசியோதெரபி செய்முறை அறிவு
✔ AYUSH மருந்துகள் பற்றிய அறிவு
✔ நல்ல உடை மற்றும் தன்னம்பிக்கையுடன் உரையாட வேண்டும்
***உதவிக்குறிப்பு: உங்களுடைய எல்லா ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் முன்னதாகவே அனுப்பவும். Staff Nurse பதவிக்கு அதிக போட்டி இருக்கும் – நர்சிங் பாடத்தில் நல்ல தயாரிப்பு அவசியம்.
முடிவுரை.
DHS மயிலாடுதுறை 2026 வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளிவந்துள்ளது, மருத்துவம் மற்றும் நலவாழ்வுத் துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள இளங்கலை மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். குறிப்பாக, Staff Nurse பதவிக்கு 8 காலியிடங்கள் இருப்பதால், நர்சிங் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 09, 2026-க்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை நழுவவிட வேண்டாம்!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 2026- DHS Mayiladuthurai FAQ 2026
1. விண்ணப்பம் செய்ய பணம் கட்ட வேண்டுமா?
இல்லை. எந்த பணமும் தேவையில்லை.
2. எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?
நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்.
3. Staff Nurse வேலைக்கு என்ன தகுதி வேண்டும்?
B.Sc Nursing அல்லது GNM படித்திருக்க வேண்டும்.
4. வேலை நிலையான வேலையா?
இது ஒப்பந்த அடிப்படையிலானது.
5. வேலை எங்க இருக்கும்?
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும்.