PAN கார்டு புதிய விதி 2026: ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ₹10,000 அபராதம்
PAN Card New Rule 2026: வரி கட்டுறவங்க, வேலை செய்றவங்க, பிசினஸ் பண்றவங்கன்னு எல்லாருக்குமே முக்கியமான ஒரு புது ரூல் வரப்போகுது. PAN கார்டை ஆதாரோட லிங்க் பண்ணலைன்னா ஃபைன் கட்ட வேண்டி இருக்கும். அது மட்டுமில்லாம பேங்க்ல பணம் போடுறது, எடுக்கறது மாதிரியான விஷயங்கள்ல சில கட்டுப்பாடுகள் வரலாம்.
2026ல இருந்து இந்த ரூல் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா அமல்படுத்தப்படலாம். அதனால என்ன விஷயம்னு முன்னாடியே தெரிஞ்சு வெச்சுக்கிறது நல்லது.
புது PAN-ஆதார் லிங்க் ரூல்:

வருமான வரித்துறை சொல்றத வச்சுப் பார்த்தா PAN கார்டை ஆதாரோட கண்டிப்பா லிங்க் பண்ணனும்.
இதோட நோக்கம் என்ன:
தப்பான PAN கார்டு இல்லனா ரெண்டு PAN கார்டு வெச்சிருக்கிறத தடுக்கிறது.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல ஒளிவு மறைவு இல்லாம இருக்கணும்.
வரி ஏய்ப்பு பண்றத குறைக்கனும்.
👉 லிங்க் பண்ணலைன்னா உங்க PAN கார்டு “Inoperative” அதாவது வேலை செய்யாத மாதிரி ஆகிடும்.
டைம் லிமிட் மற்றும் ஃபைன் டீடைல்ஸ்:
என்ன ரூல்ஸ் இருக்குன்னு பாருங்க.
- PAN கார்டை ஆதாரோட கண்டிப்பா லிங்க் பண்ணனும்.
- இல்லன்னா ₹10,000 வரைக்கும் ஃபைன் கட்டணும்.
- உங்க PAN கார்டு வேலை செய்யாம போய்டும்.
இதனால என்ன பிரச்சனைன்னா ITR ஃபைல் பண்ண முடியாது, பேங்க்ல வேலை நடக்காது, பெரிய ட்ரான்சாக்ஷன்ஸ் எதுவும் பண்ண முடியாது.
⚠️ ஃபைன் மற்றும் லாஸ்ட் டேட்லாம் கவர்மெண்ட் சொல்றத பொறுத்து மாறலாம்.
இந்த கட்டுப்பாடு யாரை எல்லாம் பாதிக்கும்?
- சம்பளம் வாங்குறவங்க
- பிசினஸ் வச்சிருக்கறவங்க
- சுயதொழில் பண்றவங்க
- முதலீடு பண்றவங்க
- PAN கார்டு வச்சு பணம் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்றவங்க
ஆனா சில பேருக்கு கவர்மெண்ட் ரூல்ஸ் படி இதுல இருந்து விலக்கு இருக்கு.
முக்கியமான விஷயங்கள்:
- PAN கார்டை, ஆதாரோட கண்டிப்பா லிங்க் பண்ணனும்.
- இல்லன்னா PAN கார்டு வேலை செய்யாம போயிடும்.
- ₹10,000 வரைக்கும் ஃபைன் கட்ட வேண்டியிருக்கும்.
- வருமான வரி கட்ட முடியாது.
- ஆன்லைன்லயும் ஆஃப்லைன்லயும் லிங்க் பண்ணலாம்.
எப்படி லிங்க் பண்றது?
PAN-ஆதார் லிங்க் பண்றது ரொம்ப ஈஸி:
- PAN நம்பர், ஆதார் நம்பர் எல்லாம் போடுங்க.
- உங்க பேரு, பொறந்த தேதி சரியா இருக்கான்னு பாருங்க.
- OTP வச்சு வெரிஃபை பண்ணுங்க.
- லிங்க் பண்ணது கன்ஃபார்ம் ஆயிடும்.
✔️ லிங்க் பண்ணதுக்கு அப்புறம் உங்க PAN கார்டை எப்பவும் போல யூஸ் பண்ணலாம்.
✅ Official Website Link (PAN–Aadhaar Linking)
👉 PAN மற்றும் Aadhaar இணைக்க வேண்டிய அதிகாரப்பூர்வ அரசு இணையதளம்:
🔗 Income Tax e-Filing Portal (Official)
https://www.incometax.gov.in/
➡️ இந்த தளத்தில் “Link Aadhaar” அல்லது “Link Aadhaar Status” என்பதை தேர்வு செய்து PAN-Aadhaar linking செய்யலாம்.
உண்டாகக்கூடிய பிரச்சினைகள்
- பேரு இல்ல (DOB) டேட் ஆஃப் பர்த்ல ஏதாவது மிஸ் மேட்ச் இருந்தா,
- ஸ்பெல்லிங் தப்பா இருந்தா,
- ஆதார், PAN டீடைல்ஸ்ல வித்தியாசம் இருந்தா, இதெல்லாம் தான்.
👉 இதுல ஏதாச்சும் இருந்தா முதல்ல ரெக்கார்ட்ஸ அப்டேட் பண்ணனும்.
✅ உடனடியாகச் செயல்படுத்த வேண்டியவை
- PAN-ஆதார் லிங்க் ஆயிருக்கான்னு பாருங்க.
- இணைக்கலைன்னா உடனே இணைச்சிடுங்க.
- எல்லா விவரமும் சரியா இருக்கான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க.
2026 – புதிய மாறுதல்கள்
டிஜிட்டல் வெரிஃபிகேஷன்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கும்.
டிரான்ஸாக்ஷன்லாம் டைரக்டா கண்காணிக்க வாய்ப்பிருக்கு.
PAN -ஆதார் லிங்க் பண்ணலைன்னா ஆட்டோமேட்டிக்கா PAN வேலை செய்யாம போய்டும் சான்ஸ் இருக்கு.
முடிவுரை.
2026ல இருந்து PAN-ஆதார் லிங்க் பண்றது ரொம்ப முக்கியமான விஷயம். இது கண்டிப்பா இருக்கணும். லிங்க் பண்ணலைன்னா ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். அது மட்டுமில்ல பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல சில தடங்கல்கள் வரலாம். உங்க PAN ஆக்டிவா இருக்கணும்னா உடனே லிங்க் பண்ணிடுங்க.
📌 முக்கிய தகவல்
- PAN–Aadhaar இணைப்பு சேவை Income Tax Department e-Filing portal மூலம் செய்யப்படுகிறது.
- இணைக்காதால் PAN செயலிழக்கலாம் (inoperative).
- அதிகாரப்பூர்வ தளம் தவிர மற்ற லிங்க்களை பயன்படுத்த வேண்டாம் (fraud வாய்ப்பு).
⚠️ Disclaimer
விதிகள், அபராதம் மற்றும் காலக்கெடுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் மாறலாம். சரியான தகவல்களுக்கு அரசு தளங்களை பார்க்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்-❓ FAQ — PAN Card New Rule 2026 (PAN–Aadhaar Linking)
1️⃣ PAN – ஆதார் இணைப்பு அவசியமா?
ஆமாம். பெரும்பாலான PAN அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் PAN-ஐ ஆதாரோடு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2️⃣ இணைக்காவிட்டால் என்ன நடக்கும்?
PAN வேலை செய்யாமல் (Inoperative) போகலாம். இதன் காரணமாக வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வது, வங்கி transaction செய்வது போன்றவற்றைச் செய்ய முடியாது.
3️⃣ அபராதம் விதிக்கப்படுமா, அது உண்மையா?
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடிப்படையில், இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படக்கூடும் (குறிப்பிட்ட நேரங்களில் ₹10,000 வரை).
4️⃣ PAN செயலற்றதாக ஆனால் என்ன விளைவு ஏற்படும்?
வருமான வரி return தாக்கல் செய்ய இயலாது
வங்கி account தொடங்க முடியாது
பெரிய தொகை பரிமாற்றங்களில் சிக்கல் ஏற்படும்
5️⃣யாருக்கு இந்த நிபந்தனைப் பொருந்தாது?
ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம் (எடுத்துக்காட்டாக: சில வயது வரம்பு அல்லது குடியுரிமை தகுதி). அதிகாரப்பூர்வமான guidelines-களைப் பார்க்கவும்.
6️⃣ இணைப்பு Status எப்படி பார்ப்பது?
e-Filing website-ல் PAN மற்றும் ஆதார் நம்பரை பதிவு செய்து status-ஐ தெரிந்து கொள்ளலாம்.
7️⃣ பெயர் அல்லது பிறந்த தேதி பொருந்தவில்லை என்றால்?
முதலில் PAN அல்லது ஆதார் விவரங்களைச் சரி செய்து update செய்ய வேண்டும்; பிறகு மறுபடியும் இணைக்க முயற்சி செய்யலாம்.