NIMHANS ஆட்சேர்ப்பு 2026-தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்
NIMHANS Recruitment 2026-இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும், முக்கியமான மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றாகத் திகழும் NIMHANS (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்), பெங்களூருவில் உள்ளது. இந்த அமைப்பு, மனநல மற்றும் நரம்பியல் சார்ந்த மருத்துவம், கல்வி மற்றும் ஆய்வில் உலக அளவில் புகழ் பெற்றது. தற்போது, 2026-ஆம் ஆண்டிற்கான Group B மற்றும் Group C பிரிவுகளில் உள்ள வேலைகளை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த அறிவிப்பில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், பத்தாம் வகுப்பு முடித்தவர்களும் அப்ளை செய்யக்கூடிய பதவிகளும் இதில் உள்ளன. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். மொத்தம் 52 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வேலை பற்றிய தகவல்கள்

அமைப்பு: NIMHANS
வேலை வகை: மத்திய அரசு வேலை
இடம்: பெங்களூர்
காலி இடங்கள்: 52
பதவி: Group B & Group C
விண்ணப்பிக்கும் வழிமுறை: ஆன்லைன்
கடைசி நாள்: 04 மார்ச் 2026
அதிகாரப்பூர்வ இணையதளம்(Official Website):
காலி இடங்கள் பற்றிய விவரம்
இந்த வேலைவாய்ப்பில் பலவிதமான தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலைகள் உள்ளன:
Senior Scientific Assistant-01, EEG Technician-03, Library Assistant-03, Artist-01, Photographer-2, Stenographer Grade-II-09, Assistant Instructor (Panchakarma)-04, Medical Records Technician-03, Junior Secretarial Assistant-22, Hospital Assistant -02மற்றும் Barber-02 போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
குறிப்பாக இதில் Hospital Assistant மற்றும் Barber போன்ற வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்பதால், கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தகுதிகள்
NIMHANS வேலைவாய்ப்பு 2026 – கல்வித் தகுதிகள்:
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் (NIMHANS) 2026 ஆம் ஆண்டிற்கான குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிகளை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வேலைக்கும் தேவையான கல்வித் தகுதி மாறுபடும்:
10-ம் வகுப்பு தேர்ச்சி – Hospital Assistant, Barber போன்ற பணிகள்.
Diploma / Certificate – குறிப்பிட்ட சில தொழில்நுட்ப வேலைகள்.
Degree / PG – Scientific மற்றும் Assistant போன்ற பணிகள்.
| பணியின் பெயர் | கல்வித் தகுதி மற்றும் அனுபவம் |
| Senior Scientific Assistant | முதுகலை அறிவியல் (Life Science) படிச்சிருக்கணும். கூடவே 2 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா ஓகே. |
| EEG Technician | Diploma (Clinical Neuro Physiology) முடிச்சிருக்கணும். இல்லன்னா B.Sc (Physics/Electronics/CS) படிச்சுட்டு 2 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கணும். |
| Library Assistant | முதுகலை நூலக அறிவியல் (MLIS) முடிச்சிருக்கணும். |
| Artist | 10-வது முடிச்சுட்டு Diploma in Arts முடிச்சு 2-3 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா போதும். |
| Photographer | 10-வது முடிச்சுட்டு Diploma in Photography முடிச்சிருக்கணும். |
| Stenographer Grade-II | ஏதாவது ஒரு டிகிரி இருந்தா போதும். தட்டச்சுத் திறன் (80 wpm) இருக்கணும். |
| Assistant Instructor (Panchakarma) | 10-வது முடிச்சுட்டு பஞ்சகர்மா சர்டிபிகேட் வாங்கிருக்கணும். அப்புறம் 2 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் வேணும். |
| Medical Records Technician | அறிவியல் டிகிரி வாங்கிட்டு மருத்துவ ஆவணப் பயிற்சி முடிச்சிருக்கணும். |
| Junior Secretarial Assistant | ஏதாச்சும் ஒரு டிகிரி இருந்தா போதும். 6 மாசம் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கணும். |
| Hospital Assistant (Panchakarma) | 10-வது பாஸ் பண்ணிருக்கணும். |
| Barber (சலவை தொழிலாளி) | 10-வது பாஸ் பண்ணி 2 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கணும். |
வயது வரம்பு டீடைல்ஸ் :
வயது வரம்பு விவரங்கள்
| பணியின் பெயர் | அதிகபட்ச வயது |
| Senior Scientific Assistant | 35 வருடங்கள் வரை |
| EEG / Library Assistant | 30 வருடங்கள் வரை |
| Artist / Photographer | 27 வருடங்கள் வரை |
| Stenographer / Assistant Instructor | 27 வருடங்கள் வரை |
| Junior Secretarial Assistant | 27 வருடங்கள் வரை |
| Hospital Assistant / Barber | 27 வருடங்கள் வரை |
வயதுக்கான கட்டுப்பாடு
வயது வரம்பில் சலுகைகள்: SC/ST வகுப்பினருக்கு 5 வருடங்களும், OBC வகுப்பினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை சலுகை வழங்கப்படும்.
ஊதியம்
இந்த வேலை வாய்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் Pay Level படி சம்பளம் வழங்கப்படும்.
- ₹18,000 – ₹56,900 → Hospital Assistant / Barber
- ₹19,900 – ₹63,200 → Junior Secretarial Assistant
- ₹25,500 – ₹81,100 → Stenographer / Instructor
- ₹29,200 – ₹92,300 → Artist / Photographer
- ₹35,400 – ₹1,12,400 → Scientific Posts
இது மட்டுமல்லாமல், DA, HRA, Medical போன்ற அரசாங்க ஊழியர்களுக்கான மற்ற சலுகைகளும் கிடைக்கும்.
தேர்வு செய்யப்படும் விதம்
விண்ணப்பித்தவர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
- கணினி மூலம் தேர்வு (MCQ)
- திறமை தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பத்திற்கான கட்டணம்
- General / OBC / EWS → ₹1180 / ₹885
- PWD → கட்டணம் கிடையாது
விண்ணப்பக் கட்டண விவரங்கள்:
பிரிவு Group B வேலைகள் Group C வேலைகள்
பொதுப் பிரிவு / OBC / EWS ₹1,180 ₹885
SC / ST / முன்னாள் ராணுவத்தினர் ₹885 ₹590
மாற்றுத் திறனாளிகளுக்கு (PWD) கட்டணம் கிடையாது கட்டணம் கிடையாது
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 03.02.2026
- கடைசி நாள்: 04.03.2026
- தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் / மே 2026
விண்ணப்பம் செய்வது எப்படி?
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கு 2026 ஆம் ஆண்டில் விண்ணப்பிக்க தகுதி உடைய மற்றும் ஆர்வம் உள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருக்கவும். விண்ணப்பதாரர்கள் 03.02.2026 முதல் 04.03.2026 தேதிக்குள் https://pnb.bank.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
தகுதி உடைய நபர்கள் அரசாங்க இணையதளத்தின் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பம் செய்வதற்கு முன்னதா
- கல்வி சான்றிதழ்கள்,
- வயதுக்கான ஆதாரம்,
- புகைப்படம் மற்றும்
- கையெழுத்து போன்றவற்றை தயாராக வைத்திருக்கவும்.
| அதிகாரபூர்வ அறிவிக்கை PDF | Click Here |
| விண்ணப்ப படிவம்–Application Form | Click Here |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | Click Here |
இந்த வேலை ஏன் அவசியம்?
மத்திய அரசாங்கத்தின் நிலையான வேலைவாய்ப்பு
குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்
நல்ல வருமானம்
மருத்துவத் துறையில் வேலைக்கான வாய்ப்பு
வேலைக்கு உத்தரவாதம்
வேலை தேடிக்கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு அபூர்வமான வாய்ப்பாக இருப்பதால், தகுதி உடையவர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கவும்.
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்-NIMHANS Recruitment 2026
1. NIMHANS வேலைவாய்ப்பு 2026-க்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டுமா?
ஆமாம், மருத்துவமனை உதவியாளர் மற்றும் முடி திருத்துபவர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்புத் தகுதி இருந்தால் போதும்.
2. எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன?
மொத்தம் 52 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
3. விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன?
மார்ச் 4, 2026.
4. தேர்வு எப்படி நடக்கும்?
MCQ தேர்வு + Skill Test.
5. எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
₹18,000 முதல் ₹1,12,400 வரை (ஒவ்வொரு வேலைக்கும் மாறுபடும்).