UPSC முதல்நிலைத் தேர்வு 2026 ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி: தகுதி, வழிமுறைகள் மற்றும் முக்கியமான விவரங்கள்.
UPSC Prelims 2026 எக்ஸாமுக்கு விண்ணப்பிக்கணுமா? இதோ உங்களுக்கான கம்ப்ளீட் கைடு!
UPSC Civil Services Prelims 2026 எக்ஸாமுக்கான அப்ளிகேஷன் இப்போ ஆன்லைன்ல இருக்கு. IAS, IPS, IFS மாதிரி Group A, Group B போஸ்ட்டுக்கு இந்த எக்ஸாம் நடக்குது. நீங்க UPSC-யோட அபிஷியல் வெப்சைட்ல மட்டும்தான் அப்ளை பண்ணனும்.
இந்த பதிவுல, UPSC Prelims 2026-க்கு எப்படி விண்ணப்பிக்கிறதுன்னு கேண்டிடேட்ஸ் ஈஸியா புரிஞ்சிக்கிற மாதிரி, ஸ்டெப் பை ஸ்டெப்பா, டீடைலா பார்க்கலாம் வாங்க.
UPSC Civil Services & Forest Services 2026 – முக்கியமான டீடெயில்ஸ்
- 🏛️ யார் நடத்துறாங்க: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
- 📅 நோட்டிபிகேஷன் வந்த டேட்: பிப்ரவரி 4, 2026
- 🧾 மொத்தம் எவ்ளோ போஸ்டிங்:
- சிவில் சர்வீசஸ் – 933
- ஃபாரஸ்ட் சர்வீசஸ் – 80
- டோட்டல் – 1,013
- 🌐 அப்ளிகேஷன் வெப்சைட்: https://upsconline.nic.in
UPSC Prelims 2026 – ஆன்லைன்ல அப்ளை பண்ண ஸ்டெப்-பை-ஸ்டெப் ப்ராசஸ்
ஸ்டெப் 1: UPSC அபிஷியல் வெப்சைட்டுக்கு போங்க
UPSC எக்ஸாமுக்கு அப்ளை பண்ணணும்னா, ஃபர்ஸ்ட்
இந்த அபிஷியல் வெப்சைட்டுக்கு போகணும்.
இந்த வெப்சைட் வழியா மட்டும்தான் UPSC எக்ஸாமுக்கான அப்ளிகேஷன் எடுத்துப்பாங்க.
ஸ்டெப் 2: புதுசா அப்ளை பண்றவங்க ரெஜிஸ்டர் பண்ணனும்
முதல் முறையா அப்ளை பண்ற கேண்டிடேட்ஸ், New Registration / One Time Registration ஆப்ஷனை செலக்ட் பண்ணி அக்கவுண்ட்ட ஸ்டார்ட் பண்ணனும்.
ஸ்டெப் 3: ஈமெயில் & மொபைல் OTP வெரிஃபிகேஷன்
உங்க ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை ரெஜிஸ்டர் பண்ணிட்டு, அதுக்கு வர்ற OTP மூலமா வெரிஃபை பண்ணனும்.
ஸ்டெப் 4: பாஸ்வேர்ட் கிரியேட் பண்ணுங்க
OTP வெரிஃபிகேஷன் முடிஞ்சதுக்கு அப்புறம், உங்க UPSC அக்கவுண்ட்டுக்கு ஒரு புது பாஸ்வேர்ட் உருவாக்கணும்.
ஸ்டெப் 5: லாகின் பண்ணி டேஷ்போர்டை ஓபன் பண்ணுங்க
ஈமெயில் ஐடி / மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட யூஸ் பண்ணி லாகின் பண்ணுங்க.
ஸ்டெப் 6: யுனிவர்சல் ரெஜிஸ்ட்ரேஷன் (UR) ஃபில் பண்ணுங்க
இதுல:
- உங்க பர்சனல் டீடெயில்ஸ்
- பெற்றோர் டீடெயில்ஸ்
- ஆதார் டீடெயில்ஸ்
- 10-வது மார்க் ஷீட் டீடெயில்ஸ்
கேட்பாங்க.
⚠️ கேர்ஃபுல்லா ஃபில் பண்ணுங்க – சேஞ்ச் பண்ண முடியாது.
ஸ்டெப் 7: URN நம்பர் வாங்குங்க
Universal Registration முடிஞ்சதும், உங்களுக்கு URN (Universal Registration Number) கொடுப்பாங்க.
ஸ்டெப் 8: காமன் அப்ளிகேஷன் ஃபார்ம் (CAF) ஃபில் பண்ணுங்க
CAF-ல:
- எஜுகேஷன் குவாலிஃபிகேஷன்
- அட்ரஸ்
- பிறந்த தேதி
- முன்னாடி எழுதின எக்ஸாம்ஸ் பத்தி
- ஃபோட்டோ & சிக்னேச்சர்
அப்லோட் பண்ணனும்.
ஸ்டெப் 9: எக்ஸாமுக்கு அப்ளை பண்ணி டீடெயில்ஸ லாக் பண்ணுங்க
Examinations → Apply For Examination இருக்குற இடத்துல
UPSC Civil Services Examination 2026-ஐ செலக்ட் பண்ணி, டீடெயில்ஸ லாக் பண்ணனும்.
⚠️ லாக் பண்ணதுக்கு அப்புறம் மாத்த முடியாது.
ஸ்டெப் 10: எக்ஸாம் சிட்டி செலக்ட் பண்ணி ஃபீஸ் கட்டுங்க
- எக்ஸாம் சிட்டி செலக்ட் பண்ணனும்
- அப்ளிகேஷன் ஃபீஸ் கட்டணும்
- அப்ளிகேஷனை சப்மிட் பண்ணணும்
👉 சப்மிட் பண்ணதும் அப்ளிகேஷன் காப்பிய சேவ் பண்ணி வெச்சுக்கோங்க.
UPSC Civil Services 2026 – எலிஜிபிலிட்டி & ஏஜ் லிமிட்
எஜுகேஷன் குவாலிஃபிகேஷன் qualification
- ஏதாவது ஒரு சப்ஜெக்ட்ல டிகிரி முடிச்சிருக்கணும்
ஏஜ் லிமிட் age limit
- குறைஞ்சது: 21 வயசு
- அதிகபட்சம்: 32 வயசு
ஏஜ் ரிலாக்சேஷன்
- SC / ST – 5 வருஷம்
- OBC – 3 வருஷம்
UPSC ஃபாரஸ்ட் சர்வீசஸ் 2026 – எஜுகேஷன் குவாலிஃபிகேஷன்
இந்த சப்ஜெக்ட்ஸ்ல டிகிரி முடிச்சிருக்கணும்:
- சயின்ஸ்
- மேத்ஸ்
- அக்ரிகல்ச்சர்
- அனிமல் ஹஸ்பண்டரி
- ஸ்டாடிஸ்டிக்ஸ்
- ஃபாரஸ்ட்ரி
- இன்ஜினியரிங்
அப்ளை பண்றவங்களுக்கான முக்கியமான டிப்ஸ்
✔️ லாஸ்ட் டேட்டுக்கு முன்னாடியே அப்ளை பண்ணுங்க
✔️ ஃபோட்டோ, சிக்னேச்சர் UPSC கைட்லைன்ஸ் படி இருக்கணும்
✔️ தப்பான டீடெயில்ஸ் கொடுத்தா அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
மார்ச் 5, 2026 (மாலை 6 மணி வரை)
⚠️ குறிப்பிடத்தக்கது:
- கடைசி நாளில் சர்வர் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது.
- கடைசி தேதிக்கு பிறகு எந்தவித விண்ணப்பமும் UPSC மூலம் ஏற்றுக்கொள்ளப்படாது.
முடிவுரை
UPSC Prelims 2026 எக்ஸாம், IAS, IPS, IFS மாதிரி பெரிய போஸ்டுக்கு போறதுக்கான ஃபர்ஸ்ட் ஸ்டெப். மேல கொடுத்திருக்கற ஸ்டெப்ஸ கரெக்டா ஃபாலோ பண்ணி, தப்பு இல்லாம அப்ளிகேஷனை ஃபில் பண்ணுங்க.
❓ UPSC Prelims 2026 – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்போது தொடங்கியது?
பிப்ரவரி 4, 2026 முதல் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
தேர்வர்கள் https://upsconline.nic.in என்ற UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி எது?
மார்ச் 5, 2026 (மாலை 6 மணி வரை)
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 தேர்விற்கு கல்வித் தகுதி என்ன?
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருந்தால், UPSC சிவில் சர்வீசஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 வயது வரம்பு என்ன?
குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 32 ஆண்டுகள்
🔹 UPSC பிரிலிம்ஸ் 2026 வயது தளர்வு யாருக்கு வழங்கப்படுகிறது?
SC / ST தேர்வர்கள் – 5 ஆண்டுகள்
OBC தேர்வர்கள் – 3 ஆண்டுகள்
UPSC பிரிலிம்ஸ் 2026 விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
விண்ணப்பக் கட்டணம் தொடர்பான விவரங்கள் UPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படும். SC/ST/பெண்கள் பிரிவினருக்கு பொதுவாக கட்டண விலக்கு வழங்கப்படும்.