Sports Authority of India Recruitment 2026-(SAI)
உங்களுக்கான ஜாக்பாட் வாய்ப்பு இதோ – SAI Assistant Coach Recruitment 2026
விளையாட்டு துறையில் அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் (Sports Authority of India – SAI) உதவிப் பயிற்சியாளர் (Assistant Coach) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 26 விளையாட்டு பிரிவுகளில் 323 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆன்லைன் விண்ணப்பங்கள் பிப்ரவரி 1 முதல் 15, 2026 வரை பெறப்படுகிறது.
விளையாட்டு பிரிவுகள், தகுதிகள், சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
SAI உதவி பயிற்சியாளர் வேலை 2026 – முக்கிய தகவல்கள்
- அமைப்பின் பெயர் : இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India – SAI)
- துறை : இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை (Ministry of Youth Affairs & Sports)
- பதவியின் பெயர் : உதவிப் பயிற்சியாளர் (Assistant Coach)
- காலிப்பணியிடங்கள் : 323
- விண்ணப்ப முறை : Online
- அதிகாரப்பூர்வ இணையதளம் : https://sportsauthorityofindia.nic.in/
- அறிவிப்பு : Assistant Coach Recruitment Notification 2026
பணியிட விவரங்கள் (Vacancy Details)
| பதவி | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| உதவிப் பயிற்சியாளர் (Assistant Coach) | 323 |
பிரிவு வாரியான இடங்கள்
- பொதுப்பிரிவு (UR) – 187
- ஒபிசி (OBC) – 73
- எஸ்சி (SC) – 32
- எஸ்டி (ST) – 9
- பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு (EWS) – 22
எந்த விளையாட்டு பிரிவுகள்?
இந்த ஆட்சேர்ப்பில் 26 வகையான Sports disciplines இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:
- Swimming (நீச்சல்)
- Athletics (தடகளம்)
- Cycling (சைக்கிங்)
- Gymnastics
- Judo
- Shooting (துப்பாக்கி சுடுதல்)
- Boxing (குத்துச்சண்டை)
- Weightlifting (பளுதூக்குதல்)
- Tennis
- Archery (அம்பு விடுதல்)
- Football
- Kabaddi
- Kho-Kho
- Badminton
- மற்றும் பல…
வயது வரம்பு (Age Limit)
- விண்ணப்பிக்கும் போது 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு (Age Relaxation)
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- Ex-Servicemen & Departmental Candidates – அரசு விதிமுறைகளின்படி
- SAI-யில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் – 1 ஆண்டு தளர்வு
கல்வித் தகுதி (Educational Qualification)
கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்:
- SAI NS-NIS, Patiala அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Sports Coaching (அல்லது சமமான தகுதி)
(OR) - Olympic / Paralympic / Asian Games / World Championship போட்டிகளில்
Coaching Certificate-உடன் பங்கேற்ற அனுபவம்
(OR) - Dronacharya Award பெற்றவராக இருக்க வேண்டும்
சம்பள விவரம் (Salary Details)
- Pay Level – 6
- மாத சம்பளம்: ₹35,400 முதல் ₹1,12,400 வரை
தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள SAI Training Centres-ல் பணியமர்த்தப்படுவார்கள்.
👉 இது Group-B (Entry Level) Government Job ஆகும்.
👉 Assistant Coach → Coach → Senior Coach → Chief Coach என Promotion வாய்ப்புகள் உள்ளன.
தேர்வு முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு 2 கட்டத் தேர்வு முறை பின்பற்றப்படும்:
1️⃣ Computer Based Test (CBT)
- Sports-related General Knowledge – 65 Questions
- Sports Science – 25 Questions
- General Knowledge & Reasoning – 10 Questions
- மொத்தம் : 100 மதிப்பெண்கள் (Objective Type)
2️⃣ Coaching Ability Test (CAT)
- பயிற்சியாளர் திறனை மதிப்பீடு செய்யும் தேர்வு
👉 Final Selection
- CAT – 60%
- Written Exam – 40%
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
- https://sportsauthorityofindia.nic.in/ இணையதளத்திற்கு செல்லவும்
- Online Application Form-ஐ நிரப்பவும்
- தேவையான ஆவணங்களை upload செய்யவும்
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்
- Submit செய்து print எடுத்துக் கொள்ளவும்
விண்ணப்பக் கட்டணம்
- பொதுப்பிரிவு / OBC – ₹2,500
- SC / ST / Ex-Servicemen / Women – ₹2,000
விண்ணப்ப காலம் : பிப்ரவரி 1 முதல் 15, 2026 வரை
முக்கிய தேதிகள் (Important Dates)
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடங்கும் நாள் | 01.02.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 15.02.2026 |
| எழுத்துத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் Sports Authority of India-யில் உதவிப் பயிற்சியாளராக பணியாற்ற விரும்பும் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், விண்ணப்பம் தொடங்கிய உடன் உடனே விண்ணப்பிக்கலாம்.
பணியின் தன்மை, விளையாட்டு வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.