தமிழ்நாடு மின்சாரத்துறையில் (TNEB / TNPDCL) சட்ட ஆலோசகர் மற்றும் மூத்த சட்ட ஆலோசகர் பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஜனவரி 31, 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் இந்த அரசு வேலைவாய்ப்பு, சட்டத் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
நிறுவன விவரம்
- துறை : தமிழ்நாடு மின்சாரத்துறை
- அமைப்பின் பெயர் : தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (TNPDCL)
- பதவிகள் : சட்ட ஆலோசகர், மூத்த சட்ட ஆலோசகர்
- காலிப்பணியிடங்கள் : 10
- அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnpdcl.org/en/tnpdcl/
- அறிவிப்பு பெயர் : TNEB Legal Consultants Recruitment 2026
பணியிட விவரங்கள்
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| சட்ட ஆலோசகர் | 1 |
| மூத்த சட்ட ஆலோசகர் | 9 |
| மொத்தம் | 10 |
கல்வித் தகுதி & அனுபவம்
சட்ட ஆலோசகர்
- வயது 35 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- சட்டத்தில் பட்டப்படிப்பு (LLB)
- பார் கவுன்சில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
- குறைந்தது 3 ஆண்டுகள் சட்டப் பயிற்சி அனுபவம்
மூத்த சட்ட ஆலோசகர்
- வயது 65 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
- சட்டத்தில் பட்டப்படிப்பு
- குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சட்ட அனுபவம்
கூடுதல் முன்னுரிமை
- Electrical / Mechanical Engineering + Law படித்தவர்களுக்கு முன்னுரிமை
- ஆங்கிலம் – படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்
- தமிழ் மொழி அறிவு அவசியம்
❌ சட்டத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள் தகுதியற்றவர்கள்
❌ அரசியல் கட்சி உறுப்பினர்களாக இருக்கக்கூடாது
❌ வேறு இடங்களில் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது
தேர்வு முறை
- விண்ணப்பதாரர்களின்
- கல்வித் தகுதி
- அனுபவம்
- மதிப்பெண்கள்
ஆகியவற்றின் அடிப்படையில் shortlist செய்யப்படுவார்கள்
- தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு Viva-Voce (நேர்காணல்) நடத்தப்படும்
- TNPDCL குழுவின் முடிவே இறுதியானது
பணி காலம்
- முதலில் 2 ஆண்டுகள் நியமனம்
- தேவையின் அடிப்படையில் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்
சம்பள விவரம்
- மூத்த சட்ட ஆலோசகர் : மாதம் ₹1,50,000
- சட்ட ஆலோசகர் : மாதம் ₹1,00,000
விண்ணப்பிக்கும் முறை
- https://www.tnpdcl.org/en/tnpdcl/ இணையதளத்திற்கு செல்லவும்
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
- தேவையான விவரங்களை நிரப்பவும்
- உரிய ஆவணங்களின் நகல்களை இணைக்கவும்
- கீழ்கண்ட முகவரிக்கு ஜனவரி 31, 2026க்குள் அனுப்பவும்
அலுவலக முகவரி
தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட்,
NPKRR மாளிகை,
144, அண்ணா சாலை,
சென்னை – 600 002.
முக்கிய தேதிகள்
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.01.2026 |
| நேர்காணல் தேதி | பின்னர் அறிவிக்கப்படும் |
முக்கிய குறிப்பு
இந்த வேலைவாய்ப்புக்கான பணியின் தன்மை, விடுமுறை, விதிமுறைகள் உள்ளிட்ட முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். தகுதியான சட்ட வழக்கறிஞர்கள் இந்த அரிய அரசு வேலைவாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.