பலரும் அரியாத பதவிகள் – ஜனவரி 29 வரை விண்ணப்பிக்கலாம்.
ரயில்வேயில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பு. இந்தியன் ரயில்வேயின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு (Isolated Categories) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. மொத்தம் 312 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், ஜனவரி 29, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பின் சிறப்பு என்னவென்றால், வழக்கமான ரயில்வே பணிகளை விட பலரும் அறியாத, தனித்துவமான பதவிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ரயில்வே தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு வேலைவாய்ப்பு 2025 – சுருக்க விவரம்
- துறை பெயர்: இந்தியன் ரயில்வே
- பதவிகள்: தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு (Isolated Categories)
- மொத்த காலிப்பணியிடங்கள்: 312
- விண்ணப்ப முறை: ஆன்லைன்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbchennai.gov.in/
- அறிவிப்பு: ரயில்வே வேலைவாய்ப்பு 2025
பதவிகள் & காலிப்பணியிட விவரங்கள்
| பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் | அடிப்படை சம்பளம் |
|---|---|---|
| தலைமை சட்ட உதவியாளர் | 22 | ரூ.44,900 |
| அரசு வழக்கறிஞர் | 07 | ரூ.44,900 |
| இளம் மொழிப்பெயர்பாளர் | 202 | ரூ.35,400 |
| சீனியர் பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர் | 15 | ரூ.35,400 |
| ஊழியர்கள் & நல ஆய்வாளர் | 24 | ரூ.35,400 |
| அறிவியல் உதவியாளர் | 02 | ரூ.35,400 |
| ஆய்வக உதவியாளர் (கிரேடு 3) | 39 | ரூ.19,900 |
| அறிவியல் மேற்பார்வையாளர் | 01 | ரூ.44,900 |
| மொத்தம் | 312 | — |
வயது வரம்பு (01.01.2026 அடிப்படையில்)
- தலைமை சட்ட உதவியாளர்: 18 – 40 வயது
- அரசு வழக்கறிஞர்: 18 – 32 வயது
- ஆய்வக உதவியாளர்: 30 வயது வரை
- அறிவியல் மேற்பார்வையாளர்: 35 வயது வரை
- இதர பதவிகள்: 33 வயது வரை
(அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு பொருந்தும்)
கல்வித்தகுதி விவரங்கள்
- தலைமை சட்ட உதவியாளர்: சட்டப் பட்டப்படிப்பு + அனுபவம்
- அரசு வழக்கறிஞர்: சட்டப் பட்டம் + 5 ஆண்டு அனுபவம்
- இளம் மொழிப்பெயர்பாளர்:
- இந்தி பாடத்துடன் முதுகலை பட்டம்
- மொழிப்பெயர்ப்பு சான்றிதழ் / டிப்ளமோ அல்லது 2 ஆண்டு அனுபவம்
- சீனியர் பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர்:
- பட்டப்படிப்பு + மக்கள் தொடர்பு / விளம்பரம் / இதழியல் டிப்ளமோ
- ஊழியர்கள் & நல ஆய்வாளர்:
- தொழிலாளர் / சமூக நலன் / மேலாண்மை சார்ந்த கல்வித்தகுதி
- அறிவியல் உதவியாளர்:
- உளவியலில் முதுகலை பட்டம் + 1 ஆண்டு அனுபவம்
- ஆய்வக உதவியாளர்:
- இயற்பியல் & வேதியியல் பாடங்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி
- அறிவியல் மேற்பார்வையாளர்:
- உளவியல் சார்ந்த முதுகலை பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி
தேர்வு முறை
- 1 கட்ட கணினி வழித் தேர்வு (CBT)
- சான்றிதழ் சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை
- மொழிப்பெயர்பாளர் பதவிக்கு கூடுதலாக திறன் தேர்வு (Skill Test)
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதியான விண்ணப்பதாரர்கள்
👉 https://www.rrbchennai.gov.in/
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- பொதுப் பிரிவு: ரூ.500
- பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் / முன்னாள் ராணுவத்தினர்: ரூ.250
முக்கிய தேதிகள்
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பம் தொடக்கம் | 30.12.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 29.01.2026 |
| கட்டணம் செலுத்த கடைசி நாள் | 31.01.2026 |
| விண்ணப்ப திருத்த காலம் | 01.02.2026 – 10.02.2026 |
முக்கிய அறிவிப்பு
ரயில்வேயில் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்கள், அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு ஜனவரி 29, 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது போன்ற அரிய ரயில்வே பதவிகளுக்கான வாய்ப்பை தவற விடாதீர்கள்.